2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இலங்கையின் எரிபொருள் விலைமனுக் கோரல் ஈரானிய விநியோகத்தருக்கு

A.P.Mathan   / 2014 மே 05 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானியன எரிபொருள் விநியோகிக்கும் நிறுவனமான Horizon க்கு தனது பிந்திய எரிபொருள் விலைமனுக் கோரலை சமர்ப்பித்து, அதற்கான அனுமதியை பெற்றுக் கொண்டதன் மூலம் 35000 தொன் எடையுடைய எரிபொருளை கொள்வனவு செய்ய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முன்வந்துள்ளது.

இந்த நடவடிக்கையானது, ஈரான் மீது அமெரிக்காவினால் பிரேரிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை மீறி முன்னெடுக்கப்பட்டுள்ள ஒரு விடயமாக கருதப்படுகிறது. 2012ஆம் ஆண்டு இவ்வாறு விதிக்கப்பட்ட தடைகளின் காரணமாக, இலங்கை தனது பெற்றோலிய இறக்குமதிகளை முன்னெடுப்பதற்கு மாற்று நாடுகளை நாட வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.

இதனை கருத்தில் கொண்ட பொருளாதார ஆய்வாளர்கள், தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் தொடர்பான சுமூகமான நிலையில், அமெரிக்காவின் பொருளாதார தடையையும் மீறி, ஈரானிய நிறுவனத்திடமிருந்து எரிபொருளை இலங்கை கொள்வனவு செய்ய வேண்டியதன் தேவை என்ன என கேள்வி எழுப்பியுள்ளனர், அத்துடன், இவ்வாறு கொள்வனவு செய்வதற்கு இராஜாங்க மட்டத்தில், அமெரிக்காவிடமிருந்து ஏதேனும் அனுமதிகள் பெறப்பட்டுள்ளனவா எனவும் கோரியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X