2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அமெரிக்க அனுமதியுடனே எரிபொருள் ஈரானிலிருந்து இறக்குமதி

A.P.Mathan   / 2014 மே 06 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

35,000 தொன் எடையுடைய எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக அண்மையில் வழங்கப்பட்டிருந்த விலைமனுக்கோரல் அனுமதியில் எவ்வித சிக்கல் நிலையும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் இடைக்கால தலைவர் அமரசேகர கருத்து தெரிவிக்கையில், இந்த தொகையை வழங்க அனுமதி வழங்கிய ஈரானின் நிறுவனமான Horizon எவ்விதமான தடைகளுக்கும் உட்பட்ட நிறுவனமல்ல. இதை நாம் அமெரிக்க அதிகாரிகளுடன் உறுதி செய்து கொண்ட பின்னரே குறித்த இறக்குமதிக்கான தீர்மானத்தை மேற்கொண்டிருந்தோம் என்றார்.

இதற்கமைய நேற்றைய தினம் தமிழ் மிரர் வணிகம் உள்ளடங்கிய சில ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகள் குறித்து எவ்விதமான ஐயப்பாடுகளையும் கொள்ளத் தேவையில்லை என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X