2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஹட்ச் – மொபிடெல் உடன்படிக்கையில் தாமதம்

A.P.Mathan   / 2014 மே 12 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்ச் நிறுவனத்தின் முழு உரிமையையும் கொள்வனவு செய்யும் மொபிடெல்லின் நடவடிக்கை தற்போது பூர்த்தியாகியுள்ள போதிலும், குறித்த நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கு மொபிடெல் வழங்க முன்வந்துள்ள தொகையை கருத்தில் கொண்டு, அதற்கான அனுமதியை வழங்க உயர்மட்ட அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் அங்கத்துவத்தை பெற்ற நிறுவனமான மொபிடெல், ஹட்சிசன் டெலிகொம் நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கு முறையான சட்ட ரீதியான நியதிகளை பூர்த்தி செய்துள்ளதாகவும், ஆனாலும் கொள்வனவு செய்வதற்காக 132 மில்லி்யன் டொலர்கள் பதியப்பட்டுள்ளதாகவும், இதற்கு திறைசேரி அனுமதி வழங்க மறுத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே ஹட்சிசன் நிறுவனத்தை கொள்வனவு செய்ய டயலொக் நிறுவனம் 78 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த முன்வந்திருந்ததாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

இந்த கொள்வனவு விற்பனை உடன்படிக்கை பூர்த்தியடையும் பட்சத்தில், தற்போது 5500 மைய நிலையங்களாக காணப்படும் ஹட்ச் வலையமைப்பு 8000 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X