2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மணப்பெண் அலங்காரத்தை வென்ற அதிர்ஷ்டசாலி மணமகள்

A.P.Mathan   / 2014 மே 13 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் முதற்தர சிகை பராமரிப்பு தயாரிப்பான சன்சில்க் வர்த்தகநாமமானது, அண்மையில் இடம்பெற்ற Vivaha 250 Bridal Exhibition நிகழ்வில் உத்தியோகபூர்வ சிகை பராமரிப்பு பங்காளராக இணைந்து கொண்டிருந்தது. இந் நிகழ்வின் ஓர் அங்கமாக, சன்சில்க் அனுசரணையுடன் ரமணி பர்னாந்து சலூனில் மணப்பெண் அலங்காரத்தை செய்து கொள்ளும் வாய்ப்பை வெல்லும் அதிர்ஷ்டசாலி மணமகளை தேர்ந்தெடுக்கும் குலுக்கல் போட்டி இடம்பெற்றது.

இதன் போது எதிர்வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற ஏற்பாடாகியுள்ள ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த சாந்தினி பர்னாந்து வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டார். இத் தகவலையறிந்த சாந்தினி சந்தோஷத்துடன் கருத்து தெரிவிக்கையில், 'இந்த குலுக்கல் தெரிவில் வெற்றியீட்டியதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இப்போது என் திருமண தினத்தன்று இலங்கையின் புகழ்பெற்ற சலூனில் அலங்காரம் செய்து கொள்வதற்கான வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளதுடன், சன்சில்க்கிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார். தனது திருமணத்திற்கு வெறும் எட்டு மாதங்களே உள்ள நிலையில், ரமணி பர்னாந்துவை சந்தித்து தனது சிகையலங்காரம் மற்றும் ஒப்பனை குறித்து சாந்தினி கலந்துரையாடியுள்ளார்.

திருமண ஏற்பாட்டின் போது சிகைக்கு பிரத்தியேக முக்கியத்துவம் வழங்குதலை அறிவூட்டும் வகையிலேயே சன்சில்க்கானது 250 Bridal Exhibition நிகழ்வில் பங்கேற்றியிருந்தது. சிறப்பாக இருப்பதற்காக பெண்களை அறிவூட்டுவதில் நம்பிக்கை கொண்டுள்ள வர்த்தகநாமம் எனும் ரீதியில், ஹெடகாரி காட்சிக்கூடத்தில் சிறந்த சிகை பராமரிப்பு பழக்கங்கள் குறித்து விழிப்பூட்டும் வகையில் குலுக்கல் தெரிவினை முன்னெடுத்திருந்தது. இவ்வரிய வாய்ப்பை பெறும் நோக்கில் ஆயிரக்கணக்கான மணப்பெண்கள் வருகை தந்து கூப்பன்களை நிரப்பி வழங்கியதுடன், காட்சிக்கூடம் மற்றும் குலுக்கல் தெரிவில் பங்கேற்பதற்கு பெரும்பாலான மக்கள் ஆர்வத்தை காட்டியிருந்தனர்.

யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் சிகை பராமரிப்பு பிரிவின் தலைவர் வத்சலா அலுத்;கெதர கருத்து தெரிவிக்கையில், 'Vivaha 250 Bridal Exhibition' நிகழ்வில் ஹெடகாரி காட்சிக்கூடத்திற்கு பெருந்திரளான மக்கள் வருகை தந்திருந்தனர். வாடிக்கையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தையும், வர்த்தகநாமம் மீது கொண்டுள்ள நம்பிக்கையை கௌரவப்படுத்தும் வகையில் வெகுமதிகள் வழங்குவதையும் குறிக்கோளாக கொண்ட வர்த்தகநாமமாக சன்சில்க் விளங்குகிறது. மேலும் காட்சிக்கூடத்தில் வழங்கப்பட்ட சிகை அறிவுரைகள் மற்றும் குலுக்கல் தெரிவில் பங்கேற்பதற்கு காட்டிய ஆர்வத்தை கண்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். திருமண ஏற்பாடுகளை முன்னெடுத்து வரும் சாந்தினிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்' என தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X