2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மலை ஏறும் போட்டியில் வெற்றியீட்டிய டரின் வீரசிங்க

A.P.Mathan   / 2014 மே 13 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


மோட்டார் ஓட்ட விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் வகையில், மஹாகஸ்தோட்டை மற்றும் எலியகந்த மலை ஏறும் போட்டிகளின் போது டரின் வீரசிங்கவின் காருக்கான அனுசரணையை UTE வழங்கியிருந்தது.

வருடாந்தம் இடம்பெறும் மஹாகஸ்தோட்டை மலை ஏறும் விளையாட்டு போட்டி தொடர்ச்சியான 80 ஆவது தடவையாக சிலோன் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கழகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெருமளவான மோட்டார் பந்தய ஆர்வலர்கள் பார்வையிட்டிருந்த இந்த போட்டியில், கடந்த போட்டிகளில் சாதனை படைத்திருந்த நிஷான் வீரசூரிய ஆகியோரை தோற்கடித்து, டரின் வெற்றியீட்டியிருந்தார்.

மஹாகஸ்தோட்டை மலை ஏறும் போட்டியின் சாதனையை தன்வசம் கொண்டுள்ள டரின் வீரசிங்க, தனது சாதனையை கடுமையான போட்டிக்கு மத்தியில் தக்கவைத்துக் கொண்டார். தொடர்ச்சியான மூன்றாவது வருடமாக இந்த போட்டியில் BRJW STI வெற்றியீட்டியிருந்தது. முதலாவது ஓட்டத்தின் போது நேரத்தை பதிவு செய்ய தவறிய டரின், இரண்டாவது ஓட்டத்தின் போது, வேகமான நேரமான 34.52 என்பதை பதிவு செய்ததன் மூலம் முன்னைய பதிவுகளை தோற்கடித்ததால், மலையின் அரசன் எனும் பட்டத்தையும் சுவீகரித்துக் கொண்டார். 

இந்த ஆண்டு மலை ஏறும் போட்டிகளுக்காக புதிய ஓடுதளம் தாபிக்கப்பட்டிருந்தது. போட்டியில் பங்குபற்றுவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, மேலதிக நுணுக்கமான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தன.

UTE ஸ்ரீலங்கா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் நலின் மனோரட்னே கருத்து வெளியிடுகையில், 'உலகளாவிய ரீதியில் விளையாட்டுகளின் போது பின்பற்றப்படும் குழுநிலை செயற்பாடுகள் மற்றும் நேர்மையான முறையில் இயங்குவது போன்ற கொள்கைகளை நாம் UTEஇல் ஊக்குவித்து வருகிறோம். எமது சர்வதேச வர்த்தக நாமமான கட்டர்பில்லர் தொடர்ச்சியாக அமெரிகாவின் NASCAR போட்டிகளுக்கு அமெரிக்காவின் இல.31 பந்தய அணியின் கட்டர்பில்லர்/செவ்ரொலெ வீரர் ரையன் நியுமன் ஊடாக அனுசரணைகளை வழங்கி வருகிறது. இதற்கமைவாக டரினின் வாகனத்துக்கும் அனுசரணை வழங்க நாம் முன்வந்தோம். இதன் மூலம் நாம் இளம் விளையாட்டு நம்பிக்கை நட்சத்திரத்துக்கு அனுசரணை வழங்குகிறோம் எனும் பெருமையும் எமக்கு கிடைத்துள்ளது' என்றார்.

எலியகந்த மலை ஏறுதல் மற்றும் மஹாகஸ்தோட்டை மலை ஏறுதல் போட்டிகளில் டரின் தற்போது சாதனை நேரத்தை கொண்டுள்ளார். அடுத்த ஓடுபாதை போட்டிகளில் இவர் பங்குபற்றவுள்ளதுடன், வெலிசறையில் இடம்பெறும் சரளைக்கல் ஓடுபாதையில் இடம்பெறும் போட்டியிலும் இவர் பங்கேற்கவுள்ளார். 
 
விளையாட்டு உலகில், கொல்ஃவ் போட்டிகளுக்கு UTE அனுசரணைகளை வழங்கியுள்ளது. அண்மையில் இலங்கை திறந்த கொல்ஃவ் சம்பியன்சிப் போட்டிகளுக்கும் அனுசரணைகளை வழங்கியிருந்தது. இதன் போது ஆரம்ப நிலையிலுள்ள பல கொல்ஃவ் வீரர்கள், ரோயல் கொழும்பு கொல்ஃவ் கழகத்தில் இடம்பெற்ற போட்டிகளில் போட்டியிட முன்வந்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X