2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அமானா வங்கியின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஸ்மீர் நியமனம்

A.P.Mathan   / 2014 ஜூன் 08 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. பைசல் சாலி ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து வலுவான சர்வதேச தொடர்பை கொண்டிருக்கும் முஹம்மத் அஸ்மீர் அவர்கள் 2014ம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். திரு. அஸ்மீர் அவர்கள் 2012ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலிருந்து அமானா வங்கியின் பிரதம தொழிற்பாட்டு அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அதன்போது நுகர்வோர், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், நிறுவன வர்த்தக தொழிற்பாடுகள், திறைசேரி தொழிற்பாடு ஆகியவற்றுக்கு அவர் பொறுப்பு வகித்து வந்தார்.

அஸ்மீர் அவர்கள் 30 வருடகால பாரம்பரிய மற்றும் இஸ்லாமிய வங்கித் துறை அனுபவத்தை கொண்டுள்ளதோடு வர்;த்தக வங்கியியலிலும், இடர் தொழிற்பாடுகளிலும் சிறந்த அனுபவத்தையும் கொண்டுள்ளார். டுபாய் சிட்டி வங்கியில் சிரேஷ;ட மட்டத்தில் பணியாற்றிய அவர் இடர் செயற்பாடுகளுக்கான துணைத் தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

2002ம் ஆண்டில் ஐக்கிய அரபுகள் இராச்சியத்தில் டுபாய் வங்கியை உருவாக்கிய ஸ்தாபகக் குழுவின் ஓர் அங்கத்தவராக இருந்த திரு. அஸ்மீர் அவர்கள், அதில் கடன் கட்டுப்பாட்டாளர் பதவியை வகித்தார்.

மத்திய கிழக்கிற்கு மேலதிகமாக ஐக்கிய இராச்சியம், இந்தியா, கென்யா போன்ற நாடுகளிலும் சிட்டி வங்கி சார்பில் பல வெளிநாட்டு பொறுப்புக்களை திரு. அஸ்மீர் அவர்கள் ஏற்று நிறைவேற்றியுள்ளார். இதன்போது, ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் பிரத்தியேகமான சவால்கள் குறித்து சிறந்த அனுபவ அறிவை அவர் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது.

இஸ்லாமிய வங்கித் துறையைப் பொறுத்த வரை, அஸ்மீர் கடந்த காலங்களில் சவுதி அரேபியாவின் மிகப் பெரிய முன்னணி இஸ்லாமிய வங்கியாக விளங்கும் அல் ராஜி வங்கியிலும், டுபாயிலுள்ள முன்னணி இஸ்லாமிய வங்கியான சாஜா இஸ்லாமிய வங்கியிலும் சிரேஷ்ட பதவிகளை வகித்துள்ளார்.

இந்த நியமனம் குறித்து கருத்து வெளியிட்ட அமானா வங்கியின் தலைவர் உஸ்மான் காசிம் அவர்கள் ' அமானா வங்கியின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக தகுதியான ஒரு வங்கியாளர் நியமிக்கப்பட்டுள்ளதையிட்டு அமானா வங்கியின் பணிப்பாளர்கள் சபையும், நானும் மகிழ்ச்சி அடைகின்றோம். அமானா வங்கியின் அடுத்த கட்ட வளர்ச்சியையும் விரிவாக்கல் நடவடிக்கைகளையும் வழிநடத்திச் செல்வதற்கு திரு. அஸ்மீர் தயாராக இருக்கின்றார்' என்று குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X