2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

தீவா காணி அதிர்ஷ்டம்

A.P.Mathan   / 2014 ஜூன் 11 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமது பெருமைக்குரிய வாடிக்கையாளர்களுக்கு பெறுமதிமிக்க வெகுமதியாக கொழும்புக்கு அருகாமையில் காணி வழங்கும் வகையில் ஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனத்தின் புகழ்பெற்ற வர்த்தகநாமமான தீவா மூலம் தொடங்கப்பட்ட ஊக்குவிப்பு திட்டத்தின் நான்காவது செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 'தீவா காணி அதிர்ஷ்டம்' எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டத்தின் கீழ் 6 மில்லியன் ரூபா பெறுமதியான வெகுமதிகளை வழங்க தீவா தயாராகவுள்ளது.

இந்த ஊக்கவிப்பு திட்டம் மே மாதம் 1ஆம் திகதி முதல் ஜுலை மாதம் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. தீவா ட்ரிபல் அக்ஷன் என குறிக்கப்பட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் 03 தீவா சஷே வெற்று பக்கற் (35g, 70g அல்லது 250g) அல்லது வேறெந்த பக்கற்றிலிருந்தும் (400g, 1kg, 2kg) ஒரு மேலுறை வீதம் உங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை குறிப்பிட்டு 'தீவா காணி அதிர்ஷ்டம்' த.பெ. இல. 1289, கொழும்பு எனும் முகவரிக்கு அனுப்பி வைப்பதனூடாக இந்த குலுக்கல் தெரிவில் கலந்துகொள்ள முடியும். ஊக்குவிப்பு காலப்பகுதியில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒருதடவை நிகழும் குலுக்கல் தெரிவில் மூன்று வெற்றியாளர்களும் மற்றும் கார்கீல்ஸ் ஃபுட் சிட்டி வலையமைப்பினூடாக முன்னெடுக்கப்படும் குலுக்கல் தெரிவில் ஒரு வெற்றியாளர் வீதமும் காணி அதிர்ஷ்டத்தை வெல்லும் வெற்றியாளர்கள் நால்வர் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்கு மேலதிகமாக தீவா தமது வாடிக்கையாளருக்கு நாளாந்தம் 10,000 ரூபா மற்றும் வாராந்தம் தங்க நாணயம் ஆகியவற்றை வெகுமதியாக வழங்கவுள்ளது.

'தீவா காணி அதிர்ஷ்டம்' திட்டத்தில் பங்கேற்பதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் வகையில் வாடிக்கையாளர்களின் சௌகரியம் கருதி இவ்வருடம் புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சஷே பக்கற் விற்பனை செய்யப்படும் ஊக்குவிப்பு சைக்கிள்கள் மூலம் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே அதிர்ஷ்டத்தை கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகளை குழுவினர் முன்னெடுத்துள்ளனர். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 'தீவா காணி அதிர்ஷ்டம்' இனை பெறுவதற்கான வாய்ப்பை பெறுவர். இந்த ஊக்குவிப்பு குழுவிலுள்ள சைக்கிள் அணியினர் மற்றும் ஊக்குவிப்பு ட்ரக் வண்டி ஆகியன நகரத்திற்கு நகரம் பயணித்து வாடிக்;கையாளர்கள் அதிக வெகுமதிகளை வெல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனூடாக வாடிக்கையாளர்கள் தீவாவை கொள்வனவு செய்யவும், நிரப்பிய கூப்பன்களை கையளிக்கவும் முடிந்துள்ளது.

இதன் போது சைக்கிள் ஓட்ட அணியினர் ஒன்றுசேர்ந்து இரத்மலானை நகரிலிருந்து பயணத்தை ஆரம்பித்ததுடன், இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தீவா வர்த்தகநாம முகாமையாளர் ஷானக பெர்னாண்டோ, 'தீவா, எந்நேரமும் எமது இல்லத்தரசிகளின் கனவுகளை நிறைவேற்றும் ஓர் வர்த்தகநாமமாகும். இல்லத்தரசிகளின் வீட்டு வேலைகளை எளிதாக்கி காலம், உழைப்பு மற்றும் பணத்தை சிக்கனப்படுத்துவதே எமது குறிக்கோளாகும். தீவா வர்த்தகநாமத்துடன் கைகோர்த்துள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு காலத்திற்கும் பெறுமதியான வெகுமதியை வழங்கி அவர்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதே எமது எதிர்பார்ப்பாகும். இதற்கமைய நாம் கடந்த 3 ஆண்டுகளாக காணிகளை வெகுமதியாக வழங்கி வெற்றியாளர்களை உருவாக்கி வருகின்றோம். இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு எமது பயணம் சரியான பாதையில்  செல்கின்றமைக்கு கிடைத்த சான்றாகும்' என தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு முதற்தடவையாக தீவா ஆரம்பித்த இத் திட்டம் 'தீவா வட்டத்துக்கு காணி' எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது கொழும்பை அண்மித்து ஒவ்வொன்றும் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 4 காணித்துண்டுகள் வழங்கப்பட்டன. 2012ஆம் ஆண்டு இரண்டாவது வருடமாகவும் 'தீவா நுவன்காரியன்ட இடமக்' எனும் கருப்பொருளின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. அதே ஆண்டு தமது வாடிக்கையாளர்களின் கனவு இல்லத்தை நிறைவேற்றும் வகையில் 03 காணித்துண்டுகளை வெகுமதியாக வழங்குவதற்கு தீவா முன்வந்திருந்தது. இதேவேளை கடந்தாண்டு 'தீவா புதையலுடன் காணி' எனும் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் 4 காணித்துண்டுகளை வழங்கியதுடன், கடந்த 3 ஆண்டுகளில் தமது வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த 11 காணித்துண்டுகளை வெகுமதியாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .