2026 மே 09, சனிக்கிழமை

திவிநெகும சமுதாய அடிப்படை வங்கிகள் திறப்பு

Kogilavani   / 2014 ஜூன் 13 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு, எருவில், மாங்காடு, பெரியகல்லாறு ஆகிய இடங்களில் அமைந்துள்ள திவிநெகும சமுதாய அடிப்படை வங்கிகள்  வெள்ளிக்கிழமை (13) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டன.

சமூர்தி அபிவிருத்தி அதிகார சபையின் 6.9 மில்லியன் ரூபா செலவில் இம் மூன்று வங்கிகளும் புதிதாக அமைக்கப் பெற்றுள்ளன.

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட சமூர்த்தி பிரதிப் பணிப்பாளர் பி.குணரெத்தினம்  ஆகியோர் கலந்துகொணடனர். 

இதன்போது 200 பயணனாளிகளுக்கு ரட்டவிருவே கடன் ஒன்றரைக் கோடி ரூபாவும், சுயதொழில் வாயப்புக்களுக்காக 50 இலட்சம் ரூபாவும் கடன்களாக வழங்கப்பட்டதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .