2026 மே 09, சனிக்கிழமை

dd

வெசாக் யாத்திரிகர்களுக்கு சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருந்த டெட்டோல்

A.P.Mathan   / 2014 ஜூன் 13 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


மே மாதம் 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை கொழும்பு வெசாக் பிராந்தியத்தில்; பங்குபற்றியிருந்த யாத்திரிகர்களுக்கு சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் டெட்டோல் ஜனாதிபதி தன்சல் நிகழ்வுடன் கைகோர்த்திருந்தது. 50 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையர்களின் நம்பிக்கையை வென்ற நாமமாக திகழும் டெட்டோல், ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் முன்னணி சுகாதார மற்றும் தூய்மையாக்கல் வர்த்தக நாமமாக திகழ்கிறது. 'தினசரி பாதுகாப்பு' எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக, பொதுமக்களுக்கு போதியளவு விழிப்புணர்வு வழங்கப்படுவதன் மூலமாகவே, தமது நாளாந்த வீட்டு, பாடசாலை மற்றும் அலுவலக செயற்பாடுகளின் போது சுகாதாரமான செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள் என்பதில் டெட்டோல் நம்பிக்கை கொண்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் தூய்மை ஆகியவற்றை தேசிய மட்டத்தில் ஊக்குவிக்கும் வகையில், 'சுகாதாரத்துக்கான குறிக்கோள்' எனும் செயற்திட்டத்தை உள்நாட்டு சமூக அமைப்புகளுடன் கைகோர்த்து முன்னெடுத்து வருகிறது. இதனூடாக கிருமி அகற்றல், தூய்மை மற்றும் முதலுதவி ஆகிய பிரிவுகளில் தனது அனுபவத்தை டெட்டோல் பகிர்ந்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு அமைவாக, ஜனாதிபதியின் தன்சல நிகழ்வில் கொழும்பு வெசாக் வலயம் 2014 இல் பங்குபற்றிய யாத்திரிகர்களுக்கு குளிர்பானங்களை வழங்கியிருந்தது. நாட்டின் உயர்தரப்படுத்தப்பட்ட தன்சல் நிகழ்வாக இது அமைந்திருந்ததுடன், 15000 க்கும் மேற்பட்டவர்களுக்கு இதன் மூலம் ஒரு நாளில் தானங்கள் வழங்கப்பட்டிருந்தன. 'தினசரி பாதுகாப்பு| என்பதற்கு அமைவாக, கைகளை கழுவுதல் போன்ற தூய்மை தொடர்பிலான தீர்வுகளை தன்சல நிகழவில் பங்குபற்றியவர்கள் மத்தியில் ஊக்குவித்திருந்தது. இதன் மூலம் 'சிறந்த ஆரோக்கியம் என்பது சிறந்த தூய்மையுடன் ஆரம்பிக்கிறது' எனும் செய்தியை அனுப்ப உதவியாக அமைந்துள்ளது.

ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் வர்த்தக பணிப்பாளர் சின்கிளெயார் குரூஸ் கருத்து தெரிவிக்கையில், 'எமது பிரதான குறிக்கோள் இலங்கையை கிருமிகளிலிருந்து விடுபட்ட நாடாக திகழச் செய்வதாக அமைந்துள்ளது. சிறந்த ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் செயற்திட்டம் எனும் வகையில், வெசாக் போயா காலப்பகுதியை, இது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்த சிறந்த காலமாக நாம் தெரிவு செய்திருந்தோம். நாட்டின் மிகப்பெரும் பண்டிகைகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான யாத்திரிகர்களை கவரும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது. எனவே கைகளை கழுவுதல், முதலுதவி மற்றும் தூய்மை தொடர்பான விசேட குறிப்புகளை வழங்குவது என்பது எமக்கு சிறந்த வாய்;ப்பை வழங்குவதாக அமைந்துள்ளது' என்றார்.

சென்.ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் சேவைகளுடன் இணைந்து இலவச முதலுதவி தீர்வுகளை வழங்க டெட்டோல் முன்வந்துள்ளது. பண்டிகைகள், விபத்துகள் மற்றும் அவசர மருத்துவ தேவைகள் காணப்படக்கூடிய சூழலில் இந்த சேவையையும் டெட்டோல் முன்னெடுத்திருந்தது. நாட்டின் அனைவரின் நம்பிக்கையை வென்ற முதலுதவி நாமமாக திகழும் டெட்டோல், சென். ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் உடன் கைகோர்த்திருந்ததன் மூலம், கொழும்பின் கங்காராமய விஹாரை, அலரி மாளிகை வெசாக் வலயம், MTV வெசாக் வலயம், சம்போதி வெசாக் வலயம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இதில் பெரஹர, பௌத்தாலோக வெசாக் வலயம், தியவன்ன வெசாக் வலயம் மற்றும் தெஹிவளை பூஜை வெசாக் வலயம் போன்றனவும் உள்ளடங்கியிருந்தன. மருந்துப்பொருட்கள் மற்றும் காயங்களுக்கு மருந்துப்பொருட்களையும் டெட்டோல் வழங்கியிருந்தது. 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .