2026 மே 09, சனிக்கிழமை

நாளைய தலைமுறையினரை போஷிக்கும் 'செலான் பெஹசர'

A.P.Mathan   / 2014 ஜூன் 13 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


செலான் வங்கி தனது வெள்ளிவிழா ஆண்டான கடந்த ஆண்டு 'செலான் பெஹசர' என்ற தொனிப்பொருளிலான நாடுதழுவிய நூலக செயற்றிட்டம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளது. நாடு முழுவதிலும் காணப்படும் வசதி குறைந்த நூலகங்களுக்கு உதவிக்கரம் நீட்டுதல் அல்லது 100 பாடசாலைகளில் புத்தம்புதிய நூலகங்களை நிறுவுதல் என்ற தூரநோக்கிற்கு அமைவாக இச்செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

குறிப்பிட்ட பாடசாலைகளில் காணப்படும் சம்பந்தப்பட்ட உட்கட்டமைப்பு தேவைகளை அடிப்படையாகக் கொண்டு இச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதேவேளை கற்றல் தொடர்பான விடயதானங்களில் மிகவும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. செலான் வங்கி கடந்த 2013ஆம் ஆண்டில் 10 மாவட்டங்களில் 12 பாடசாலை நூலகங்களை நிறுவும் பணிகளை பூர்த்தி செய்துள்ளதுடன், 2014 இன் முதல் காலாண்டு காலப்பகுதியில் மேலும் 14 பாடசாலை நூலகங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

'செலான் பெஹசர' செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதற்கொண்டு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது மட்டுமன்றி, நாட்டின் அனைத்துப் பாகங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான பாடசாலைச் சிறார்களிடம் இருந்து மிகவும் சாதகமான மற்றும் ஊக்கமளிக்கும் பின்னூட்டல் கருத்துக்களையும் தம்வசப்படுத்தியிருக்கின்றது.

அடுத்து வருகின்ற மேலும் மூன்று ஆண்டுகளுக்கு செலான் வங்கி இத்திட்டத்தை விஸ்தரிப்பதற்கும் அதேபோல் நாடெங்கும் உள்ள வசதி குறைந்த மேலும் பல பாடசாலைகளை இதில் உள்வாங்கிக் கொள்ளவும் அதன்மூலமாக தேவையுடன் இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான சிறுவர்களின் வாழ்க்கையை குறிப்பிட்டுக் கூறக்கூடிய, அர்த்தமுள்ள விதத்தில் தொடுவதற்கும் மேற்குறிப்பிட்ட விடயமே தூண்டுதலாக அமைந்தது. இவ்வகையான செயற்றிட்டமொன்று – ஆசிரியர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் பெற்றோர்களின் வாழ்க்கையைக் கூட ஏககாலத்தில் தொட்டுச் செல்வதாக அமைந்து விடுகின்றது. 

இன்று வரைக்கும் 17 மாவட்டங்களில் 29 பாடசாலை நூலகங்களை அன்பளிப்பாக வழங்கிய பெருமையை செலான் வங்கி பெற்றுக் கொள்கின்றது. 100 நூலகங்கள் என்ற இறுதி இலக்கை எட்டும் வரைக்கும் இப் பயணமானது மிகவுன்னத உத்வேகத்துடன் தொடரும்.

தனது கூட்டாண்மை அடிப்படைப் பண்புக்கு அமைவாக செயற்படும் விதத்தில் - கூட்டாண்மை DNA ஆக திகழும் 'அன்புடன் அரவணைக்கும் வங்கி' என்ற தாரக மந்திரத்தில் உட்பொதிந்துள்ள அர்த்தத்தைப் போன்று நீண்டகால அடிப்படையிலான கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு தொடர்பான பயணத்தில் 'கல்வியை' ஒரு முக்கிய விடயமாக செலான் வங்கி பணிப்பாளர் சபையின் நிலைபேண்தகு செயற்குழுவானது தேர்ந்தெடுத்திருக்கின்றது.

செலான் வங்கியானது, அடிமட்ட தளத்திற்கு சென்று அவர்களது பரந்துபட்ட விருப்பங்களையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றி, பெரியதொரு பங்குதாரர் குழாமுடன் கைகோர்த்து இருக்கின்றது.  இந்நாட்டில் சமநிலைப் பிரஜைகளை ஊட்டி வளர்ப்பதிலும் உருவாக்குவதிலும் தமது நிறுவனம் கொண்டுள்ள உள்ளார்ந்த சாத்தியக்கூறுகளை செலான் வங்கி உணர்ந்துள்ளது. சூழல் நட்புறவுமிக்க, சமூகப் பொறுப்புணர்வுள்ள மற்றும் பொருளாதார ரீதியான நெகிழ்ச்சித்தன்மை கொண்ட மனப்பாங்கில் முன்னேற்றகரமான தேசிய அபிவிருத்தியை முன்கொண்டு செல்வதற்கு இவ்வாறான பிரஜைகள் நீண்டகாலத்தில் கணிசமான பங்களிப்பு நல்குவார்கள்.

செலான் வங்கியின் செயலணியானது, சம்பந்தப்பட்ட பாடசாலைகள் மற்றும் புவியியல் ரீதியாக பரவலாக அமைக்கப்பட்டுள்ள கிளை வலையமைப்புக்கு சேவையாற்றுவற்காக  உத்வேகத்தோடு பணியாற்றிக் கொண்டிருக்கின்றது. நூலக செயற்பாடுகளின் முன்னேற்றத்தை இச் செயலணி உன்னிப்பாக மேற்பார்வை செய்கின்றது. அதேவேளை, சிறுபராயம் முதற்கொண்டு சிறுவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊட்டி வளர்ப்பதில் கூட்டிணைந்து செயலாற்றி வருபவர்களான அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடனும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நூலக செயற்றிட்டத்தின் ஊடாக மாணவர்களிடையே பலம்பொருந்திய மற்றும் ஊக்கமுள்ள இடைத் தொடர்புகளை மேம்படுத்துவதிலும், கற்பதற்கு ஏதுவான சூழலை உருவாக்கிக் கொடுப்பதிலும் செலான் வங்கி நம்பிக்கை கொண்டிருக்கின்றது. அதன்மூலம் மாணவர்களின் மனப்பாங்கை பொறுப்புணர்வுமிக்கதாக மாற்றியமைக்க முடியும் என்பதுடன், செயற்றிறன் மிக்கவர்களாகவும் அதேபோன்று தமது முழு நாட்டுக்கும் தரம் மற்றும் பெறுமதியுள்ள பிரஜைகளாகவும் முன்னேறுவதற்கு அவர்களுக்கு உதவுவதற்கும் இயலுமாக இருக்கும்.

மிகவும் நம்பிக்கைக்குரிய, வெற்றிகள் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி முன்நகர விரும்பும் நபர்களுக்காக – நேற்றைய தினத்தையும் இன்றைய தினத்தையும் பலன் தரவல்ல நாளைய தினத்தோடு இணைக்கக் கூடிய பலம்மிக்க நிலைபேண்தகு பாலமொன்றை கட்டியெழுப்புவதை மேற்படி 'செலான் பெஹசர' செயற்றிட்டம் நோக்காகக் கொண்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .