2026 மே 09, சனிக்கிழமை

dd

ரூபாவின் பெறுமதி, பங்குச்சந்தை உயர்வு

A.P.Mathan   / 2014 ஜூன் 17 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் மூலம் வங்கிகளுக்கான கொள்கை கட்டணங்கள் மேலும் 50 அடிப்படை புள்ளிகளால் குறைக்கப்படவுள்ளமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல் வெளியானதை தொடர்ந்து பங்குச்சந்தை மீதான நாட்டம் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்திருந்ததாக பங்கு முகவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். நாணயக் கொள்கை தொடர்பான அறிக்கை புதன் கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கட்கிழமை கொடுக்கல்வாங்கல்கள் நிறைவடையும் போது பிரதான சுட்டெண் 6.88 புள்ளிகளால் அதிகரித்து 6344.10 புள்ளிகளாக நிறைவடைந்திருந்தது. 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதிவாகியிருந்த பெறுமதியை தொடர்ந்து, பங்குச்சந்தையில் பதிவாகியிருந்த அதியுயர் தொகையாக இதை குறிப்பிட முடியும். வங்கிகளின் பங்குகள் மீது முதலீட்டாளர்கள் அதிகளவு ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதேவேளை இலங்கை ரூபாவின் பெறுமதி 130.23/25 ஆக நேற்றைய தினம் பதிவாகியிருந்ததாக நாணயமாற்று முகவர்கள் அறிவித்திருந்தனர். அதிகளவு பண உள்வருகைகள் மற்றும் அரச வங்கிகள் டொலர்களை கொள்வனவு செய்யும் பெறுமதியை குறைத்திருந்தமை போன்றன இதில் பங்களிப்பு செலுத்தியிருந்ததாக அவர்கள் மேலும் குறிப்பிட்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .