2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வங்கிகள் திறப்பு

Kogilavani   / 2014 ஜூன் 26 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சம்மாந்துறையில் 7 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி மகா சங்கம் மற்றும் திவிநெகும  ஹூதா சமுதாய அடிப்படை வங்கி என்பன வியாழக்கிழமை(26) திறந்து வைக்கப்பட்டன.

சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்வீஸ், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட், அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கே.விமலநாதன், அம்பாறை மாவட்ட பிரதம கணக்களர் ஐ.எம்.ஹூசைன், திவிநெகும திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் யூ.பி.எஸ்.அனுருத்த பியதாச, உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த வைபவத்தின்போது வங்கி வாடிக்கையாளர்களுக்கான முத்திரைக் கொடுப்பணவுகளும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X