2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மத்திய வங்கியின் பதில் ஆளுநராக பி.சமரசிறி நியமனம்

A.P.Mathan   / 2014 ஜூலை 15 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

2014 ஜூன் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் பதில் ஆளுநராக பி.சமரசிறி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆறரை வருடங்களாக மத்திய வங்கியின் உதவி ஆளுநராக கடமையாற்றியுள்ளார். 
 
இதேவேளை கடந்த நான்கரை ஆண்டு காலப்பகுதியில் இவர் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 
 
இதற்கமைய இவர் தற்போது சுமார் 31 வருட காலம் மத்திய வங்கிசார் செயற்பாடுகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய மத்திய வங்கிகளின் மூலம் முன்னெடுக்கப்பட்டிருந்த வெவ்வேறு செயலமர்வுகளில் உரையாற்றியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X