
'ரொபியலக்' வர்ணப்பூச்சு (பெயின்ட்) உற்பத்தியாளர்களாகவும் சந்தைப்படுத்துனராகவும் திகழ்கின்ற லங்கெம் பெயின்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனமானது, இவ்வருட எசல பெரஹராவை முன்னிட்டு கண்டி தலதா மாளிகை கட்டிடத் தொகுதிக்கு முழுமையாக வர்ணம் பூசுவதற்கான தனது வருடாந்த 'வர்ண பூஜா' முன்னெடுப்பை கடந்த வாரம் அங்குரார்ப்பணம் செய்து வைத்தது.
இப்போது தொடர்ச்சியான பத்தாவது வருடமாக லங்கெம் பெயின்ட்ஸ் நிறுவனத்தால் முன்னெடுக்கப்படுகின்ற வருடாந்த 'வர்ண பூஜா' ஆனது, லங்கெம்மின் வருடாந்த நாட்காட்டியில் மிக முக்கியமான நிகழ்வுகளுள் ஒன்றாக இடம்பிடித்துள்ளது மட்டுமன்றி புனித தங்க தாது வைக்கப்பட்டுள்ள ஆலயமான தலதா மாளிகையுடன் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்படுகின்ற பழமைவாய்ந்த பல்வேறுபட்ட சமய அனுஷ்டானங்களில் ஒன்றாகவும் காணப்படுகின்றது.
லங்கெம் சிலோன் பி.எல்.சி. நிறுவனத்தின் பணிப்பாளர் றுவான் ரி. வீரசிங்க கூறுகையில், 'இவ்வாறான ஒரு முன்முயற்சியை பொறுப்பேற்றுக் கொண்ட முதலாவது தனியொரு நிறுவனமாக லங்கெம் பெயின்ட்ஸ் இந்த 'வர்ண பூஜா' முன்னெடுப்பை ஆரம்பித்தது. பௌத்த உலகில் மிகவும் புனிதமான மற்றும் வணக்கத்திற்குரிய சமய அடையாளமாக தலதா மாளிகை திகழ்கின்றது. எனவே, எசல பெரஹரவை முன்னிட்டு பத்து வருடங்களாக இந்த கட்டிடத் தொகுதிக்கு முழுமையாக வர்ணம்பூசுவதையிட்டு ஆழ்ந்த கௌரவமும் சிறப்புரிமை உணர்வையும் பெறுகின்றோம்' என்றார்.
'இந்த செயற்றிட்டத்தின் முக்கியத்துவத்தை கடைப்பிடிக்கும் முகமாக தலதா மாளிகை கட்டிடத் தொகுதிக்கு வர்ணம் பூசுவதற்காக, விஷேடமான தூய்மையாக்கல் உள்ளடக்கங்களை தன்னகத்தே கொண்டதும் அதேநேரம் விஷேடமாக தனிச் சிறப்புமிக்க ஓர்க்கிட் வெள்ளை நிறம் கலக்கப்பட்டதுமான - விஷேடமாக உருவாக்கப்பட்ட, நீடித்து உழைக்கக் கூடிய 'இலாஸ்டமரிக் பெயின்டை' நாம் பயன்படுத்துகின்றோம். மிகவுன்னதமான ஒரு புண்ணிய கருமமாக இது இருப்பதற்கு புறம்பாக, இவ்வாறான முன்னெடுப்புக்களின் ஊடாக இலங்கையின் வளமிக்க கலாச்சாரம் மற்றும் மரபுரிமைக்கு பங்களிப்பு வழங்க முடிவதையிட்டும் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். லங்கெம் ரொபியலக் என்பது முழுமையாகவே உள்நாட்டில் உருவான இலங்கைக் கம்பனியாக திகழ்கின்றது. ஆதலால், இலங்கை மக்களுக்கு நன்றி தெரிவிக்க நாம் மிகவும் கடமைப் பட்டிருக்கின்றோம்' என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
எசல பெரஹரவை முன்னிட்டு ஒரு சாதனையாக தொடர்ச்சியாக பத்தாவது வருடமாகவும் தலதா மாளிகைக்கு வர்ணம் பூசுவதற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குகின்றமைக்காக லங்கெம் பெயின்ட்ஸ் நிறுவனத்திற்கு தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல பண்டார நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் பெயின்ற் உற்பத்தித் துறையில் ஒரு முன்னோடியான லங்கெம் ஆனது, இன்று இலங்கையின் மிகப் பெரிய 100மூ உள்நாட்டு வர்ணப்பூச்சு உற்பத்தியாளராகவும் சந்தைப்படுத்தும் நிறுவனமாகவும் உள்ளது. லங்கெம் நிறுவனத்தின் உயர்ரக உற்பத்தி வகைகளுள் - எமசல்சன், எனாமல், வெதர் கோட், விஷேட தோற்றப்பாட்டுக்கான வர்ணப்பூச்சு, பிரைமர்ஸ், துணையுற்பத்திகள், சுவர் தயார்படுத்தல் உற்பத்திகள், நிலப் பூச்சுகள், அன்ரி கொரோசிவ், பசைத்தன்மை சார்ந்தவை, மர உற்பத்திகளை பாதுகாப்பவை, வாகனங்களுக்கான வர்ணப்பூச்சு போன்றவை உள்ளடங்குகின்றன. இதன்மூலம் இலங்கையிலுள்ள வர்ணப்பூச்சு வாடிக்கையாளர்களின் அனைத்து விதமான தேவைகளும் நிவர்த்தி செய்யப்படுகின்றன.
2002ஆம் ஆண்டு ISO 9000 தரச் சான்றிதழை லங்கெம் பெற்றுக் கொண்டதன் மூலம், இலங்கையின் முதலாவது ISO 9000 சான்றுபடுத்தப்பட்ட வர்ணப்பூச்சு கம்பனி என்ற பெருமையை பெற்றுக் கொண்டது.
அதேபோல் எக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள லங்கெம் வர்ணப்பூச்சு தொழிற்சாலையே இலங்கையில் தர முகாமைத்துவ முறைமைக்காக முதன்முதலாக SLS ISO 9001:2008 சான்றிதழைப் பெற்றுக்கொண்ட வர்ணப்பூச்சு உற்பத்தி வசதியாகவும் காணப்படுகின்றது.
அதுமட்டுமன்றி, SLS தர அடையாளத்திற்கு மேலதிகமாக இலங்கையில் சூழல் முகாமைத்துவ முறைமைக்காக ISO 14001 தரச் சான்றிதழைப் பெற்றுள்ள முதல் வர்ணப்பூச்சு உற்பத்தியாளர் என்ற பெருமையையும் தம்வசப்படுத்தியுள்ளது.