2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

தனியார் முதலீடுகளை கோரும் இலங்கை துறைமுக அதிகார சபை

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 07 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகத்தின் கடல் வளாகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள துறைமுக நகருக்கான முதலீடுகளை தாம் தனியார் துறையிடமிருந்து பெருமளவு எதிர்பார்ப்பதாகவும், இதற்கு எவ்வித தடைகளும் இல்லையெனவும் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார். 
 
திறந்த சந்தையிலிருந்து நாம் இந்த நிர்மாணப்பணிகளுக்கான நிதிகளை சேகரித்த வண்ணமுள்ளோம். இலங்கை அரசாங்கத்திடமிருந்து எமக்கு எவ்விதமான நிதியுதவிகளும் கிடைக்கவில்லை. நாம் அதை எதிர்பார்க்கவுமில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
 
கொழும்பு தெற்கு துறைமுகம் மற்றும் கலங்கரை விளக்கம் ஆகிய பகுதிக்கு இடைப்பட்ட 252 ஹெக்டெயர் பரப்பளவு கடல் பகுதி நிரப்பப்பட்டு நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் முதலீடுகளை மேற்கொள்ள எவ்விதமாக கட்டுப்பாடுகளும் கிடையாது என அவர் தெரிவித்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X