
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் பேராசிரியர் எஸ்.டி.ஜயரட்ன, சிறப்பு விருதையும், சிறப்பு தேர்ச்சிக்கான சான்றிதழையும் இன்டர்ஃபார்ம் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான கலன ஹேவமல்லிக அவர்களிடம் கையளிக்கிறார்.
இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் மூலம் 17ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விநியோகத்தர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வின் போது இன்டர்ஃபார்ம் பிரைவேற் லிமிடெட், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் சிறந்த உள்நாட்டு உற்பத்தியாளருக்கான சிறப்பு விருதை தன்வசப்படுத்தியிருந்தது. இந்த ஒன்றுகூடல் நிகழ்வு 2014 ஜூலை 19ஆம் திகதி யால, ஜெட்விங் ஹோட்டலில் இடம்பெற்றது.
2013ஆம் ஆண்டுக்கான இந்த தங்க விருதுடன், சிறப்பு தேர்ச்சிக்கான சான்றிதழும் இன்டர்ஃபார்ம் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. இன்டர்ஃபார்ம் நிறுவனம், கெமா பார்மசியுட்டிகல்ஸ் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் உறுப்புரிமை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் அரச துறைக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடாகவும், தனியார் துறைக்கு இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவும் உயர் தரமான மருந்துப் பொருட்களை உரிய நேரத்தில் விநியோகித்து வருகின்றமைக்காக இந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.