2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

விவேகானந்த ப்றீமியர் லீக் போட்டிகளுக்கு சொலிட் கோல்ட் ஜுவல்லர்ஸ் வழங்கிய வெள்ளி நாணயம்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் வருடாந்தம் நடத்துகின்ற பழைய மாணவ சங்க அங்கத்தவர்களுக்கு இடையிலான அணிக்கு அறுவர் கொண்ட மென்பந்து கிரிக்கட் போட்டிகளுக்கு கொழும்பு சொலிட் கோல்ட் ஜுவலரி அனுசரணை வழங்கியுள்ளது.
 
நாராஹேன்பிட்டி சாலிக்கா மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற விவேகானந்தா ப்றீமியர் லீக் போட்டிகளுக்கான நாணய சுழற்சியை மேற்கொள்வதற்கான வெள்ளி நாணயம் ஒன்றை வடிவமைத்து வழங்கியது.  
 
நாணயத்தில் ஒரு பக்கத்தில் பழைய மாணவர் சங்கம் (OSA) எனவும், மறுபக்கத்தில் விவேகானந்தா ப்றீமியிர் லீக் (VPL) எனவும் பொறிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த வெள்ளி நாணயத்தை சொலிட் கோல்ட் ஜுவலரியின் முகாமையாளரும் கல்லூரியின் பழைய மாணவருமான வி.சந்திரசேகரன் பழைய மாணவர் சங்க தலைவர் எஸ்.மீனாட்சி சுந்தரத்திடம் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக கையளித்தார். 
 
எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த கிரிக்கட் போட்டிகளின் நாணய சுழற்சிகளுக்கு இந்த நாணயமே பயன்படுத்தப்படும் என சங்கத்தின் தலைவர் எஸ்.மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X