2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'சகன அருண' இலகு கடன் அறிமுகம்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா, சுகிர்தகுமார்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சமூதாய அடிப்படையிலான வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி வங்கியினூடாக இன்று (01) திவிநெகும 'சகன அருண' இலகு கடன் அறிமுகம் செய்து வைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேசசெயலகத்திலும் இவ்வைபவம் திங்கட்கிழமை(01) இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் ஐ.எம் ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் திவிநெகம மாவட்ட இணைப்பதிகாரி ஐ.அலியார் உட்பட திவிநெகும முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக்கடன் தொகையானது 5,000 ரூபா முதல் 50,000 ரூபாய் வரை மிகக் குறைந்த 4 சதவீதமான வட்டியில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இது நுகர்வுக்கடனாகவும், ஏனைய கடன்களை தீர்த்துக் கொள்ளும் பொருட்டும், தொழில் முயற்சிகளுக்காகவும் எந்தவிதமான பிணைகள், ஈடுகள், ஆவணங்கள் இன்றி இக்கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலள்ள இரண்டு வங்கி களிலிருந்தும் முதற்கட்டமாக திங்கட்கிழமை(1) 64 பயனாளிகளுக்கு வைபரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை, கல்முனை  பிரதேச செயலகத்திலும்   65 குடும்பம்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது. திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர்  எ.ஆர்.எம்.சாலிஹ்  தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், கிராம நிர்வாக  உத்தியோகத்தர் லாகிர், திவிநெகும  முகாமைத்துவ பணிப்பாளர்  எஸ்.எஸ்.பரீரா,   திவிநெகும வங்கி  முகாமையாளர்களான   எஸ்.சதீஸ், எம்.எம்.எம்.முபீன்   உட்பட திவிநெகும அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கடனுதவி வழங்கும் நிகழ்வில் 18 பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டது.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X