.jpg)
செவ்வாய்க்கிழமை கொடுக்கல் வாங்கல்களின் போது, பங்குச்சந்தை சுட்டிகள் சரிவடைந்திருந்தது. இதில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டயலொக் ஆக்சியாடா பிஎல்சி ஆகியன அதிகளவு பங்களிப்பை செலுத்தியிருந்தன.
பிரதான சுட்டெண் 6.07 புள்ளிகளால் சரிவடைந்து 7024.82 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. புரள்வு பெறுமதி 1 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. நிறுவனசார் உயர் நிகர பெறுமதி வாய்ந்த ஈடுபாடு சிங்ஹபுத்ர ஃபினான்ஸ் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு லங்கா ஐஓசி மற்றும் ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் யூனியன் வங்கி ஆகியவற்றின் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்களின் செயற்பாடு குறைந்தளவில் காணப்பட்டது.
வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதித் துறை என்பது சந்தையின் புரள்வு பெறுமதியில் உயர் பங்களிப்பை வழங்கியிருந்தது. (சிங்ஹபுத்ர ஃபினான்ஸ், செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள், யூனியன் வங்கி, கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் எல் பி ஃபினான்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன்) துறை சுட்டெண் 0.40 வீத உயர்வை பதிவு செய்திருந்தது. சிங்ஹபுத்ர ஃபினான்ஸ் பங்கொன்றின் விலை 5.00 ரூபாவால் (2.08%) அதிகரித்து 245.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்கொன்றின் விலை 1.80 ரூபாவால் (3.59%) அதிகரித்து 52.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. யூனியன் வங்கி பங்கொன்றின் விலை 0.10 ரூபாவால் அதிகரித்து 20.90 ரூபாவாக பதிவாகியிருந்தது. கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பங்கொன்றின் விலை 2.10 ரூபாவால் (6.14%) அதிகரித்து 36.30 ரூபாவாக பதிவாகியிருந்தது. எல் பி ஃபினான்ஸ் பங்கொன்றின் விலை 11.50 ரூபாவால் (7.26%) அதிகரித்து 170.00 ரூபாவாகி பதிவாகியிருந்தது.
நம்பிக்கை நிதியங்கள் துறை என்பது சந்தையின் புரள்வு பெறுமதியில் இரண்டாவது உயர் பங்களிப்பை வழங்கியிருந்தது. இந்த துறை 0.43மூ சரிவை பதிவு செய்திருந்தது.
இதேவேளை, ஏசில் தனது இடைக்கால பங்கிலாபத்தை பங்கொன்றுக்கு 1.00 ரூபா வீதம் அறிவித்திருந்தது.