
இஸ்லாமிய வங்கிக் கொள்கைக்கு அமைய செயற்பட்டு வரும் இலங்கையின் முன்னணி வங்கியான அமானா வங்கி தற்போது சந்தையில் மிகக் குறைந்த ஐந்து வருட குத்தகை (இஜாரா) தவணைக் கொடுப்பனவுத் திட்டத்தை வழங்குகின்றது. அதாவது 100,000 ரூபா குத்தகைக்காக மாதாந்தம் (வரி உள்ளடங்களாக) 2,131 ரூபாவை தவணைக் கொடுப்பனவாக செலுத்தும் வசதியை அமானா வங்கி வழங்குகிறது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமானா வங்கியின் குத்தகை மற்றும் வீடமைப்பு நிதிப் பிரிவின் தலைவர் திரு. சமிந்த டி சில்வா ' சந்தையில் புத்தம் புதிய மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்காக மிகக் குறைந்த அளவில் ஐந்து வருட குத்தகை தவணைக் கொடுப்பனவு வசதியை வழங்குவதையிட்டு உண்மையில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். இதன் மூலம் எமது வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமானதும், குறைந்த விலையிலுமான குத்தகை வசதியை வழங்குவதற்கான எமது கடமை மேலும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த சலுகைக்காக எந்தவொரு மறைமுகமான கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது. அதேபோல், வாடிக்கையாளர்கள் நாடு பூராகவும் உள்ள எமது எந்தவொரு கிளையின் ஊடாகவும் 24 மணித்தியாலங்களுக்குள் இந்த குத்தகைக்கான நிதி வசதியை பெற்றுக் கொள்ளலாம்' என்று குறிப்பிட்டார்.
வங்கியில் இந்த பிரத்தியேக குத்தகை எண்ணக்கரு பற்றி தெளிவுபடுத்திய அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் மூலோபாய சந்தைப்படுத்தல் பிரிவின் உப தலைவர் சித்தீக் அக்பர் ' இஜாரா கொள்கைக்கு அமைய எமது குத்தகை எண்ணக்கரு தொழிற்படுகின்றது. அதாவது வாடிக்கையாளருக்கு தேவையான வாகனத்தை வங்கி கொள்வனவு செய்து அதை அந்த வாடிக்கையாளருக்கு வழங்குகின்றது. இதன்மூலம் அவர் அந்த வாகனத்தை பயன்படுத்தி நன்மையடையலாம். இணங்கிக்கொள்ளப்பட்ட தவணைக் கொடுப்பனவு காலம் நிறைவு பெறும் போது, வங்கி அந்த வாகனத்தை குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு அன்பளிப்பாக வழங்கிவிடும். இதற்கமைய, வாகனத்தின் முழு உரிமையையும் அந்த வாடிக்கையாளர் அனுபவிக்கலாம்'.
இலகுவாக குறைந்தபட்ச ஆவணங்களுடன் அமானா வங்கி மிகக் குறைந்த நேரத்திற்குள் துரிதமாக குத்தகை வசதியை வழங்குகின்றது. ஐந்து வருடங்கள் வரை புத்தம் புதிய மற்றும் பதிவு செய்யப்படாத வாகனத்தின் மொத்த பெறுமதியின் 100 சதவீதத்திற்கும் குத்தகை வசதி வழங்கப்படுகின்றது. வாடிக்கையாளரின் விருப்பத்திற்கமைய இலகு கொடுப்பனவு முறையிலான காப்புறுதியும் உண்டு. தொழில்வாண்மையாளர்களுக்கு பிணையாளிகள் அவசியமில்லை. பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கும் விசேட சலுகை உண்டு.
வட்டி சாராத இஸ்லாமிய வங்கி முறையுடன் முற்றிலும் இணங்கி செயற்படும் இலங்கையின் முதலாவது உத்தரவு பெற்ற வர்த்தக வங்கியே அமானா வங்கியாகும். தனது மூலோபாய பங்காளிகளான மலேஷpயா பேர்ஹட் இஸ்லாமிய வங்கி, சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, பங்களதேஷpன் ஏ.பீ. வங்கி ஆகியவற்றின் மூலம் ஊக்குவிக்கப்பட்டுள்ள அமானா வங்கி இலங்கையின் வங்கித் துறைக்குள் ஒரு புதிய பாதையை உருவாக்கி வருவதோடு, நாடு பூராகவும் வளர்ந்து வரும் ஒரு பிரத்தியேக வங்கி முறைக்கான சந்தை வாய்ப்பில் தமது மூலதனத்தை மையப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது.