2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நிமெக்ஸ் நாமத்தை கையகப்படுத்தியுள்ள அற்லஸ்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் பாடசாலைகளுக்கான காகிதாதிகள் உற்பத்தியில் ஈடுபடும் முன்னணி நிறுவனமான  அற்லஸ், பிரபல்யமான நிமெக்ஸ் வர்த்தக நாமத்தை கையகப்படுத்தியுள்ளது. உயர் தரம் வாய்ந்த வளைளரந தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் நிமெக்ஸ் வர்த்தக நாமம், அற்லஸ் நிறுவனத்தின் விஸ்தரித்துச் செல்லும் தயாரிப்புகளின் பிந்திய உள்ளடக்கமாக அமைந்துள்ளது. 
 
தனது பிரதான வர்த்தக செயற்பாடுகளுடன் தொடர்புடைய வகையில் நிமெக்ஸ் நாமத்தை கம்பனியானது உள்வாங்கியிருந்தது. நிலையான வளர்ச்சி பாதையில் தன்னை பதிவு செய்து கொண்டு, உறுதியான செயற்பாட்டையும் முன்னெடுத்து வருகிறது.
 
சிலோன் பென்சில் கம்பனி (பிரைவேற்) லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நிர்மல் மதநாயக்க கருத்து தெரிவிக்கையில், 'விருந்தோம்பல் துறையில் ஏற்பட்டு வரும் விஸ்தரிப்பு, நுகர்வோரின் மாறிவரும் வாழ்க்கைத்தரம் மற்றும் வருமான அளவுகளின் அதிகரிப்பு போன்றன பாவனையின் பின்னர் இலகுவாக அழிக்கக்கூடிய இதுபோன்ற பொருட்களுக்கு மத்திய கால அடிப்படையில் சிறந்த வளர்ச்சி காணப்படும். இந்நிலையில் நிமெக்ஸ் போன்ற வர்த்தக நாமங்களை கையகப்படுத்தியுள்ளமையானது, அற்லஸ் வர்த்தக நாமத்துக்கு தனது பிரதான வர்த்தக செயற்பாட்டை மேலும் உறுதி செய்ய ஏதுவாக அமைந்திருக்கும்' என்றார்.
 
சிலோன் பென்சில் கம்பனி பிரைவேற் லிமிடெட்டின் பிரதான வணிகங்கள் மற்றும் விநியோக வலையமைப்பினூடாக வாடிக்கையாளர்கள் நிமெக்ஸ் தயாரிப்புகளை இலகுவான முறையிலும் தர உத்தரவாதங்களுடன் மற்றும் மனநிறைவையும் பெற்றுக் கொள்ள முடியும். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X