2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மருத்துவ சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க இலங்கை திட்டம்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020ஆம் ஆண்டில் 20 பில்லியன் டொலர்களை ஏற்றுமதி வருமானமாக பெறும் வகையில் இலங்கையின் மருத்துவ சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் சுஜாதா வீரகோன் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையின் ஏற்றுமதி வருமானமீட்டும் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கக்கூடிய ஓர் உப துறையாக மருத்துவ சுற்றுலாத்துறை அமைந்துள்ளது. இது தொடர்பில் எந்தவொரு பங்காளர்களுடனும் இணைந்து செயலாற்ற நாம் தயாராகவுள்ளோம். 
 
இலங்கையில் காணப்படும் மருத்துவ வசதிகளை பெற்றுக் கொள்வதற்காக வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருவோரை உள்ளடக்கியதாக மருத்துவ சுற்றுலாத்துறை அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
 
இலங்கையில் மொத்தமாக 1084 அரசாங்க வைத்தியசாலைகளும், புகழ்பெற்ற தனியார் வைத்தியசாலைகளும் காணப்படுகின்றன.
 
மாலைதீவுகள் போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதற்காக வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X