2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இன்டர் ஃபுளோராவின் உலகளாவிய வலையமைப்புடன் லஸ்ஸன ஃபுளோரா நிறுவனம் ஒன்றிணைகின்றது

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி மலர்சார் தீர்வுகள் வழங்குனரான லஸ்ஸன ஃபுளோரா நிறுவனம் இன்டர் ஃபுளோராவின் உலகெங்குமுள்ள கிட்டத்தட்ட 50,000 உறுதிமிக்க மலர் விற்பனை நிலையங்களின் வலையமைப்புடன் அண்மையில் இணைந்துள்ளது. இதன்மூலம், உலகின் எந்தப் பாகத்திற்கும் மலர்களை விநியோகம் செய்யக்கூடிய முழுமையான ஆற்றலை லஸ்ஸன ஃபுளோரா இப்போது பெற்றுக் கொண்டுள்ளது. அதேபோல், இன்டர் ஃபுளோரா நிறுவனமானது இலங்கையிலான தனது மலர் விநியோகத்தை லஸ்ஸன ஃபுளோரா ஊடாக மேற்கொள்ளும். இதன்மூலம் தங்குதடையற்ற சர்வதேச மட்டத்திலான தொழிற்பாடு பூர்த்தி செய்யப்படுவதுடன், பலப்படுத்தப்படுகின்றது. 
 
இன்டர் ஃபுளோரா உலகளவில் மிகப் பெரிய மலர் நிறுவனமாக திகழ்கின்றது. நீண்டகாலமாக சேவையாற்றும் மலர் விநியோக வலையமைப்பையும் இந்நிறுவனம் கொண்டியங்குகின்றது. கடந்த 95 வருடங்களுக்கும் மேலாக இன்டர் ஃபுளோரா நிறுவனம் 145 இற்கும் அதிகமான நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச மலர் விநியோக சேவையின் ஊடாக மிகச் சிறந்த தரத்தைக் கொண்ட மலர்சார் உற்பத்திகளையும் சிறப்புத்துவமிக்க வாடிக்கையாளர் சேவையையும் வழங்கி வருகின்றது. 
 
லஸ்ஸன ஃபுளோரா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் டாக்டர் லசந்த மாளவிகே கூறுகையில், 'இவ்வாறான சிறப்புமிக்க ஒரு சர்வதேச மலர் விநியோக வலையமைப்புடன் இணைவதையிட்டும், உலக மலர்சார் வரைபடத்தில் இலங்கையை இடம்பெறச் செய்வது குறித்தும் நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். லஸ்ஸன ஃபுளோரா ஆனது, இலங்கையிலுள்ள தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தங்குதடையற்ற லஸ்ஸன ஃபுளோரா வர்த்தக அடையாளமிடப்பட்ட அனுபவத்தின் ஊடாக உலகளாவிய அடைவிடங்களுக்கு மலர் மற்றும் பரிசு விநியோக சேவையை வழங்குவதற்கு இப் புதிய சேவை இடமளிக்கின்றது. இந்த ஒன்றிணைவு எமது சேவை வழங்கலை மேலும் மேம்படுத்துவது மட்டுமன்றி, உலகம் முழுவதிலும் உள்ள இன்டர் ஃபுளோரா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் இலங்கையிலுள்ள வணிக இணை நிறுவனங்கள், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு லஸ்ஸன ஃபுளோரா ஊடாக மலர்களை அனுப்பி வைப்பதற்கும் வசதி கிடைக்கின்றது. உயர்தரமானதும் புத்தம்புதியதுமான மலர்களை சர்வதேச அளவில் விநியோகம் செய்யும் சேவையை ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பொருட்டு, உலகின் முதன்மையான மலர் மற்றும் பரிசுகள் சார்ந்த வணிக நிறுவனத்துடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதையிட்டு நாம் மன மகிழ்ச்சியடைகின்றோம்' என்று தெரிவித்தார். 
 
லஸ்ஸன ஃபுளோராவின் கதையைப் பொறுத்தமட்டில் அது இளமையான, வளர்ச்சியடைந்து செல்லும் நிறுவனமாகும். மிகவும் போட்டிகரமான சூழலில் இலங்கையின் சந்தையில் நிலைபெற்ற முன்னணி நிறுவமனமாக திகழும் உத்வேகத்துடன் இது முன்னேறிக் கொண்டு இருக்கின்றது. 1998ஆம் ஆண்டு டாக்டர் லசந்த மாளவிகே அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்ட இந் நிறுவனம் ஒப்பீட்டளவில் மிக குறுகிய காலப்பகுதியான பதினாறு வருடங்களுக்குள் இலங்கையின் வீடுகள் தோறும் பிரபலமான வர்த்தகப் பெயராக வளர்ச்சியடைந்துள்ளது. 
 
கடந்த வருடம், மலர்களின் இதழ்களில் அச்சுப்பொறிக்கப்பட்ட எழுத்துருக்கள் மற்றும் புகைப்படங்களை அறிமுகம் செய்ததன் மூலம் லஸ்ஸன ஃபுளோரா நிறுவனம் இலங்கையின் மலர் துறையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சாதனையை நிகழ்த்தியதன் காரணமாக, இவ்வாறான தனிச்சிறப்புமிக்க ஒரு சேவையை வழங்கும் இலங்கையின் முதலாவது மலர் நிறுவனம் என்ற பெருமையை முதன்முதலாக தனதாக்கிக் கொண்டது. 
 
சில மாதங்களுக்குப் பிறகு, மலர்கள் மற்றும் பரிசுகள் பட்டியல் (Flowers and Gifts Catalogue) தொகுப்பை அறிமுகம் செய்து வைத்தது மட்டுமன்றி அதனுடன் இணைந்ததாக கொழும்பு, கண்டி, நீர்கொழும்பு மற்றும் அவற்றின் புறநகர் பகுதிகளுக்கான இலவச விநியோக சேவையையும் அங்குரார்ப்பணம் செய்ததன் மூலம் இலங்கையின் மலர் துறையில் மீண்டும் ஒருமுறை புரட்சியை ஏற்படுத்தியது. கவர்ச்சிகரமான 40 வர்ணப் பக்கங்களைக் கொண்ட இந்த பட்டியல் தொகுப்பானது இலங்கையில் இவ்வாறான முதலாவது அறிமுகமாக காணப்படுவதுடன், பல்வேறுபட்ட வைபவங்களுக்குப் பொருத்தமான பலவிதமான மலர் அலங்காரங்கள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கியுள்ளது. அதேநேரம் வாடிக்கையாளர்கள் ஒன்லைன் ஊடாக 'ஓடர்களை' மேற்கொள்ளவும் வசதியளிக்கின்றது. 
 
பரிசுக் கூடை விநியோக சேவையின் ஊடாக மென்மையான பொம்மைகள் போன்ற அழகான மற்றும் போற்றுதலுக்குரிய பரிசுகள் அடங்கிய பரிசுக் கூடைகளை அனுப்புவதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு இப் பட்டியல் தொகுப்பு அளிக்கின்றது. அதுமட்டுமன்றி, பண்டிகைக்கால மலர்களுடனான 'குடிபான கூடையையும்' (Gourmet Hampers) அனுப்பி வைக்க முடியும். இவ் வசதியானது இலங்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக காணப்படுகின்றது. 
 
இலங்கையின் மலர் துறையில் புதியபோக்குகளை உருவாக்கும் லஸ்ஸன ஃபுளோரா நிறுவனம் - நாவல, கண்டி சிற்றி சென்டர், மொரட்டுவை மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களிலுள்ள கிளைகளின் ஊடாக சேவையாற்றுகின்றது. தென்னாசியாவிலேயே ISO 9001-2008 தரச் சான்றளிக்கப்பட்ட ஒரேயொரு மலர் விற்பனைக் கம்பனியாக இது உயர்ந்த ஸ்தானத்தை வகிப்பதுடன், 'SLIM வர்த்தக குறியீட்டு சிறப்புத்துவ விருதுகள் 2012' நிகழ்வின் போது சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி பிரிவில் தங்கப் பதக்கம் பெற்ற நிறுவனம் என்ற பெருமையை தனதாக்கியது.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X