2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் உள்ளக பிரச்சினைகள் காரணமாக வரி சேகரிப்பு பாதிப்பு

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பணிப்பாளர் நாயகப் பதவிக்கு நிலையான ஒருவரை நியமிக்காமை, உயர்ந்த பதவிக்கு அரசியல் ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றமை போன்றவற்றின் காரணமாக வரி சேகரிப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
 
திறைசேரியின் மூலமாக திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கும் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கும் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்தது. நடப்பு ஆண்டுக்கான இலக்கை திணைக்களம் எய்தியிருக்கவில்லை எனவும், 75 பில்லியன் ரூபா குறை காணப்பட்டதாகவும், இதன் காரணமாக அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகள் இடை நடுவில் காணப்படுவதாகவும் திறைசேரி குற்றஞ்சாட்டியிருந்தது.
 
2014 ஆம் ஆண்டுக்கான மீளாய்வு செய்யப்பட்ட வருமான வரி என்பது 1168 பில்லியன் ரூபாவாக அமைந்திருப்பதுடன், 2015 ஆம் ஆண்டுக்கான இலக்கு 1361 பில்லியன் ரூபாவாக அமைந்துள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X