2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ரஷ்யா, உக்ரேன் அமைதியற்ற நிலை இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் வருகையில் தாக்கம்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோட்டல் உரிமையாளர்கள் இந்த விடுமுறை பருவ காலத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்க்கின்ற போதிலும், இந்த எண்ணிக்கை என்பது உக்ரேன் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலை காரணமாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
'ரஷ்யா மற்றும் உக்ரேனில் காணப்படும் நிலை தொடர்பில் நாம் அதிகளவு கவனம் செலுத்தி வருகிறோம். இந்த நிலை காரணமாக, இந்த பிராந்தியத்தலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடையக் கூடும்' என எயிட்கன் ஸ்பென்ஸ் ட்ராவல்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் நலின் ஜயசுந்தர தெரிவித்திருந்தார்.
 
இந்த அமைதியற்ற சூழ்நிலை காரணமாக ரஷ்யாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணமாகும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 – 30 வீதமாக குறைந்துள்ளதெனவும், ரஷ்யாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஐந்தில் ஒருமடங்காக குறைந்துள்ளதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X