2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

திங்கட்கிழமை, அமெரிக்க வியாபார கண்காட்சி

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 26 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் எதிர்வரும் திங்கட்கிழமை (29) இடம்பெறவுள்ள அமெரிக்க கண்காட்சி நிகழ்வின் போது பெருமளவான உள்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்று அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களுடன் சம்பாஷனைகளை மேற்கொள்ள முடியும் என அமெரிக்க வர்த்தக சம்மேளனம் (AMCHAM) அறிவித்துள்ளது.
 
திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 7.30 மணி வரை கொழும்பு ஹில்டன் ரெசிடென்சிஸ் ஹோட்டலில் இடம்பெறவுள்ள இந்த கண்காட்சியில் முன்னணி அமெரிக்க நிறுவனங்களை உள்ளடக்கிய 25 காட்சி கூடங்கள் இடம்பெறவுள்ளன. 
 
பங்குபற்றும் நிறுவனங்களில் 3M, கொகா-கோலா, இன்ஃபோடெக், மோட்டரோலா, கொமர்ஷல் லிங்க், ஈஸ்ட்-வெஸ்ட் ஃபுட்ஸ், வேர்டூசா, டிஸ்கவரி/சன்பிரெலா, யுஎஸ் கொட்டன் கவுன்சில், வொஷிங்டன் அப்பிள்ஸ், ஃபெட்எக்ஸ், டுபொன்ட், சன்பவர் சிஸ்டம்ஸ், புரொக்டர் அன்ட் கம்பல், அமெக்ஸ்/மெக்கினன்ஸ், ஜவிஆர் லங்கா, என்வொய் வசிலிடி மனேஜ்மன்ட், எயிட்கன் ஸ்பென்ஸ் ட்ராவல்ஸ், ரெக்னிஸ் ஹோல்டிங்ஸ், அபான்ஸ் மற்றும் ஃபல்க் எமர்ஜன்சி சேர்விசஸ் போன்றன உள்ளடங்கியுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X