2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஹொக்கி விளையாட்டினை மீண்டும் கட்டியெழுப்பும் ரிட்ஸ்பரி

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 27 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில்; முதல் தர சொக்லட் வர்த்தகநாமமான ரிட்ஸ்பரி இன் பூரண அனுசரணையுடன் இலங்கையின் ஹொக்கி விளையாட்டிற்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் குறிக்கோளுடன், மாத்தளை புனித.தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஹொக்கி சங்கத் தலைமையின் கீழ் செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி 'ரிட்ஸ்பரி பாடசாலைகளுக்கிடையேயான அணிக்கு எழுவர் கொண்ட ஹொக்கி போட்டித்தொடர்' மாத்தளை எட்வர்ட் பார்க்கில் இடம்பெறவுள்ளது.
 
கடந்த காலப்பகுதியில் இலங்கையில் ஹொக்கி விளையாட்டு பல பின்னடைவுகளை சந்தித்திருந்தன. இந்த விளையாட்டிற்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல வீரர்களை உருவாக்கி தந்த மாத்தளை நகரில் மீண்டும் ஹொக்கி விளையாட்டினை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தியுள்ளமை விசேட விடயமாகும்.
 
இதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகளை மாத்தளை புனித.தோமஸ் கல்லூரி பழைய மாணவர் ஹொக்கி சங்கம் ஆரம்பித்துள்ளதுடன், இது பாடசாலை மற்றும் ஹொக்கி விளையாட்டிற்கிடையே பிரிக்க முடியாத பிணைப்பை பிரதிபலிப்பதாகவும், இப் பாடசாலையினால் உருவாக்கப்பட்ட வீரர்கள் ஹொக்கி விளையாட்டிற்கு பங்களிப்பை வழங்கவுள்ளதாகவும் கல்லூரியின் அதிபர் லுதினன் கேர்னல் தம்பிய வனசிங்க தெரிவித்தார்.
 
'CBL நிறுவனம் கரப்பந்தாட்டம், கால்பந்தாட்டம், ஸ்குவாஷ் மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு அனுசரணை வழங்கியுள்ளது. அது மட்டுமன்றி, ஜோர்ன் டார்பட், வர்த்தக மெய்வல்லுநர் போட்டி மற்றும் சர்வதேச பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளுக்கும் (ISAC) அனுசரணை வழங்கி தடகளத் துறையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை எமது நிறுவனம் மேற்கொண்டுள்ளது. கடந்த காலங்களில் நம்நாட்டில் புகழ்பெற்று விளங்கிய ஹொக்கி விளையாட்டினை மீண்டும் தேசிய மட்டத்திற்கு உயர்த்துவதே எமது முயற்சியாகும்' என CBL இன் சந்தைப்படுத்தல் முகாமையாளர் தேஜா பீரிஸ் தெரிவித்தார்.
 
'இந் நாட்டில் புகழ்பெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு அனுசரணை வழங்கி வந்த ஊடீடு நிறுவனமானது தற்போது ஹொக்கி விளையாட்டினை பாடசாலை மற்றும் தேசிய மட்டத்தில் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான ஆதரவிiனை வழங்கியுள்ளது' என மாத்தளை புனித.தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஹொக்கி சங்கத்தின் செயலாளர் எரிக் ஹுலங்கமுவ தெரிவித்தார்.
 
எந்தவொரு விளையாட்டையும் மக்கள் மத்தியில் பிரபல்யமடையச் செய்வதற்கு சக்திமிக்க அனுசரணை அவசியமாகும். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் ஹொக்கி விளையாட்டிற்கு புகழ்பெற்று விளங்கிய மாத்தளை நகரிலிருந்து ஆரம்பிக்கவுள்ள ஹொக்கி விளையாட்டினை நாடு முழுவதும் பரவச் செய்வதற்கு நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ரிட்ஸ்பரி ஆதரவு வழங்குகின்றமை மாபெரும் சக்தியை அளிக்கிறது. இவ் விளையாட்டின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் போட்டியின் ஊடாக தேசிய ஹொக்கி விளையாட்டிற்கு ஆற்றும் சேவைகள் குறித்து மிக கவனத்துடன் அவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
 
48 போட்டிகளை கொண்ட ஒருநாள் போட்டித்தொடரில் கொழும்பிலிருந்து றோயல் கல்லூரி, ஆனந்தா கல்லூரி, வெஸ்லி, டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் கல்கிசை புனித.தோமஸ் கல்லூரிகளும், கண்டியிலிருந்து தர்மராஜ, திரித்துவக் கல்லூரி, புனித.சில்வெஸ்டர் மற்றும் கிங்ஸ்வூட் கல்லூரிகளும், மாத்தளையிலிருந்து புனித.தோமஸ், விஜய, கிருஸ்துதேவ மற்றும் சாஹிரா கல்லூரிகளும், யாழ்ப்பாண வித்தியாலயம், காலி அலோசியஸ், வென்னப்புவ ஜோசப் வாஸ், நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா, கம்பளை பண்டாரநாயக்க மற்றும் பதுளை தர்மதூத கல்லூரிகள் போன்றன பங்குபற்றவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X