2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நேச்சர்ஸ் சீகரட்ஸ் பொடி லோஷனை வாங்கினால் ஸ்கூட்டர்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 29 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


இயற்கையின் இரகசியங்களை உங்கள் சருமத்துக்கு வழங்கும் 'நேச்சர்ஸ் சீக்ரட்ஸ்', உற்பத்திகள் சந்தையிலுள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் உற்பத்திகளை பின்தள்ளிவிட்டு, இலங்கையின் முதற்தர அழகுச்சாதன குறியீடாக மக்கள் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளது. 2020 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து உருவாக்கப்படும் சர்வதேச அழகுச்சாதன குறியீடாக நேச்சர்ஸ் சீக்ரட்ஸை உருவாக்குவதற்கான முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அத்துடன் நிறுவனத்தின் உற்பத்திகள் 100% உள்ளுர் தயாரிப்பாகும்.   
 
நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் வர்த்தக பெயர் இதுவரையில் 50 நாடுகளில் அறிவுசார் ஆவணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 20 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு  'நேச்சர்ஸ் சீக்ரட்ஸ்' உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  
 
உயர்தரத்தை கொண்ட அழகுச்சாதன உற்பத்திகள் நூற்றுக்கும் அதிகமாக  தயாரிக்கின்ற 'நேச்சர்ஸ் சீக்ரட்ஸ்', தமது பொடி லோஷன் உற்பத்திகளை கொள்வனவு செய்யும் பாவனையாளர்களுக்காக 'ஹொண்டா - எக்டிவா ஐ' பரிசாக வழங்கும் போட்டியை அண்மையில் ஆரம்பித்தது. ஆகஸ்ட் முதல் முதல் டிசம்பர் வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த ஹொண்டா  எக்டிவா ஐ' ஸ்கூட்டர்கள் 10 ஐ பரிசாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
 
போட்டிக்கு தகுதிபெறுவதற்கு ' நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ்' பொடி லோஷன் போத்தலின் முன்புறத்திலுள்ள லேபள் (225 ml போத்தலின் லேபள் ஒன்றினை அல்லது 100ml போத்தல்களின் இரண்டு லேபள்கள், அல்லது 50ml போத்தல்களின் மூன்று லேபள்கள்)  நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் நிறுவனம், த.பெ.01, மில்லேவ, ஹொரனை என்ற முகவரிக்கு அனுப்பவும். அதற்கமைய சீட்டிழுப்பின் மூலம் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். முதற்கட்ட சீட்டிழுப்பு கொழும்பில் அண்மையில் இடம்பெற்றதுடன் மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
இந்நிகழ்விற்கு பிரபல நடிகர் சந்திக்க நாணயக்கார, நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர்/ முகாமைத்துவ பணிப்பாளர் சமந்த குமாரசிங்க, நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், ஸ்டெபர்ட் மோட்டர்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X