
தேசிய விவசாய வர்த்தக சபையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட 'தேசிய விவசாய வணிக விருது 2014' நிகழ்வு அண்மையில் BMICH இல் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதன் போது சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் தானிய ஆகாரமான சமபோஷ மிகப்பெரிய உணவு உற்பத்தி செயல்முறைக்கான தங்க விருதை வென்றெடுத்தது.
முற்றுமுழுதாக தேசிய மூலப்பொருட்களை கொண்டு சமபோஷ உற்பத்தி செய்யப்படுகிறது. சமபோஷ உற்பத்திக்கான மூலப்பொருட்களை வழங்கும் நாடு முழுவதுமுள்ள 8000 க்கும் மேற்பட்ட தேசிய விவசாயிகள் இதனூடாக பயனடைந்து வருகின்றனர். இந்த பின்னோக்கிய ஒருங்கிணைப்பு (Backward Integration) திட்டம் மூலம் எமது விவசாய பொருளாதாரத்திற்கு வலுவூட்டப்படுவதுடன், தேசிய விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் உதவிகள் வழங்கப்படுகின்றன.
இலாபத்தை மாத்திரம் குறிக்கோளாக கொண்டிருக்காமல், பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனம் அதன் உற்பத்திக்கு பங்களிப்பு வழங்கும் விவசாய மக்களின் நலனிலும் கவனம் செலுத்தி வருகிறது. 2012 ஆம் ஆண்டில் நிறுவனத்தினால் 'கொவி பவுல' திட்டம் பிரதானமாக விவசாயிகளின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டது. இத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் 'கொவி சதுட்ட', 'கொவி தெனும' மற்றும் 'கொவி அரண' போன்ற செயற்றிட்டங்கள் ஊடாக அவர்களது வௌ;வேறு தேவைகளை பூர்த்தி செய்வதற்கான உதவிகள் வழங்கப்படுகின்றன.
விவசாயச் சமூகத்திற்கும், பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்திற்கும் இடையேயான சக்திமிக்க பிணைப்பு குறித்து அந் நிறுவனத்தின் பணிப்பாளரும்/ பிரதான நிறைNவுற்று அதிகாரியுமான ஷம்மி கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், 'எமது நிறுவனத்தின் குறிக்கோள் இலாபமீட்டுதல் மாத்திரமல்ல. இந்நாட்டு விவசாயத்துறையில் விவசாய மக்களை நியாயமான முறையில் ஈடுபடுத்திக் கொள்ளுதலும் ஆகும்.
இதற்காக நாம் விசேட திட்டத்தை பின்பற்றுகிறோம். விற்பனை உடன்படிக்கை மூலம் நாம் விவசாயிகளுடன் உடன்பட்ட விலையை விட சந்தை விலை கூடுமானால்; அந்த அதிகமான விலையை நாம் அவர்களுக்கு திருப்பியளிக்கிறோம். அதேபோல், உடன்பட்ட விலையை விட சந்தை விலை குறைவடையும் போது உடன்பட்ட தொகையினையே நாம் விவசாயிகளுக்கு வழங்குகிறோம்' என்றார்.
விதை முதல் கொள்வனவு செயல்முறை வரையான காலப்பகுதியில், இந் நிறுவனத்தின் மூலம் கடன்;, பயிர்களின் முறையான பராமரிப்பு தொடர்பில் உறுதி செய்யும் வகையில் கள அதிகாரிகளின் விஜயங்கள் மற்றும் சமபோஷ உற்பத்திக்கு உயர் தரமான மூலப்பொருட்களை வழங்குவது தொடர்பில் விவசாயிகளை விழிப்பூட்டல் போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன என கருணாரத்ன மேலும் குறிப்பிட்டார்.
சமபோஷ உற்பத்தி செயல்முறை நவீன இயந்திரங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகளின் ஆரோக்கியம் மற்றும் நலனை நன்குணர்ந்துள்ள பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனம் விவசாயிகளின் நலன் கருதி 'கொவி பவுல' திட்டத்தின் கீழ் மேலும் பல செயற்திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதுடன், 'கொவி சுவய' செயற்றிட்டத்தின் கீழ் விவசாயிகளின் ஆரோக்கியத்துக்கு தேவையான ஆதரவுகளையும் வழங்கவுள்ளது.