
உலகின் மிகப் பெறுமதி வாய்ந்த மரங்களுள் நறுமணமிக்க அகர்வுட்டும் ஒன்றாகும். இன்று உலகிலுள்ள மிக விலையுயர்ந்த வாசணைத்திரவியங்களில் இந்த அகர்வுட் நறுமணமே பயன்படுத்தப்படுகிறது. அதன் மருத்துவ குணங்களுக்கு பயன்படுத்தப்படுவதுடன், மத்திய கிழக்கு நாடுகளில் தூபம் மற்றும் எண்ணெய் வகைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
தென்கிழக்காசியா நாடுகளில் பரந்து காணப்படும் எகியுலேரியா மரங்களில் அகர்வுட் பிசின்கள் காணப்படுகின்றன. இந்த மரங்கள் தொடர்ச்சியாக பூஞ்சண பங்கசுக்கள் மற்றும் Phialophora parasitica இனால் தாக்கப்பட்டு, அதற்கு பதிலாக நறுமணமிக்க பிசின்களை உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன. இது பிசின் வகை உலக அரங்கில் மிக பெறுமதி வாய்ந்ததாக காணப்படுகிறது.
இந்த அம்சங்கள் உற்பத்திக்கான கேள்வியை அதிகரித்துள்ளதுடன், அகர்வுட் தரத்திற்கமைய மரத்தின் பெறுமதி தீர்மானிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் மின்னேசொடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரொபர்ட் பிளான்செட்டே மற்றும் அவரது குழுவினர் இணைந்து ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் ஊடாக நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பமான CA Kits(Cultivated Agarwood) இனை வடிவமைத்துள்ளனர்.
இந்த CAKit முறை மூலம் ஒவ்வொரு அகர்வுட் மரங்களிலும் அதன் செயற்பாடு செயல்முறை விரைவுப்படுத்தப்பட்டு அகர்வுட் பிசின்கள் பெறுவது உறுதிபடுத்தப்படுகிறது.
வணிக நோக்கிலான மற்றும் பொருளாதார ரீதியில் பெருமளவு பயன் தரக்கூடிய அகர்வுட் அறுவடை பெறும் குறிக்கோளுடனே இந்த ஒற்றை காப்புரிமை அகர்வுட் ஊக்குவிப்பு தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டது.
குழு பிரதம நிறைவேற்று பணிப்பாளரான எச்.கே.ரோஹன கருத்து தெரிவிக்கையில், 'சதாஹரித பிளாண்டேஷன்ஸ் நிறுவனம் இலங்கையில் பிரத்தியேக காப்புரிமையை கொண்டுள்ளதுடன், இதற்கான காப்புரிமையை சதாஹரித பிளான்டேஷன்ஸ் நிறுவனம் மட்டுமே கொண்டுள்ளது. ஏனைய முறைகள் CA Kit இற்கான காப்புரிமை மீறலாக கருதப்படுகிறது. ஏனெனில் CA Kit காப்புரிமை அகர்வுட்டினை தூண்டுவதற்கான அனைத்து முறைகளையும் உள்ளடக்கியுள்ளது' என்றார்.
உயர் தரமான அகர்வுட் சாரத்தை பெறும் நோக்கில் இந்த தொழில்நுட்பத்தில் சதாஹரித நிறுவனம் அதிகளவு முதலீடு செய்துள்ளது. மேலும் தெற்காசியாலிலேயே மிகப்பெரிய கன்றுகள் வளர்ப்பு பண்ணையாக கருதப்படும் அதன் இங்கிரிய கன்றுகள் வளர்ப்பு பண்ணையின் ஊடாக அகர்வுட் மர விநியோகத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாகம் ஆகியவற்றை சதாஹரித ஒன்றிணைத்து வருகிறது.
'சதாஹரித மூலம் இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வணிக நோக்கிலான எகியுலேரியா விதைகள் வியட்நாம்; விவசாய திணைக்களம் மூலம் அங்கீகரிக்கப்பட்டு சான்றளிக்கப்பட்டுள்ளன. சான்றளிக்கப்பட்ட செய்கை செயல்முறைக்கமைய உயர் அறுவடை பெறப்படுகிறது' என சதாஹரித பிளாண்டேஷன் லிமிடெட்; நிறுவனத்தின் தலைவர் சதீஷ் நவரத்ன தெரிவித்தார்.
அகர்வுட் முதலீடுகளின் போது குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் மற்றும் உயர் தரமான மரத்தை பெறுவதற்கு நோய்த்தடுப்பு உபகரணங்கள் பயன்படுத்துதலை ஊக்குவிக்கும் தீய சக்திகளை வாடிக்கையாளர்கள் நம்புவதை தவிர்க்க வேண்டும்.
சதாஹரிதவுடன் முதலீடுகளை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு அகர்வுட் மரங்களின் பராமரிப்பு தொடர்பில் இலவச நிபுணர் அறிவுரை மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இந் நிறுவனம் அறுவடையை திரும்பப்பெறும் வாக்குறுதியையும் அளித்துள்ளது.
கடுமையான தரக் கட்டுப்பாடு மற்றும் சர்வதேச தரங்களுடன் ஒழுங்கமைதல் காரணமாக சதாஹரித எந்தவித வாடிக்கையாளர் முறைப்பாடுகளையும் பெறவில்லை. இந் நிறுவனம் ISO தரச்சான்றிதழை பெற்றுள்ளதுடன், 'தேசிய பசுமை விருதுகள் 2012' இல் தங்க விருதை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
