.jpg)
குழந்தைகளின் உயிர்களை கொடிய டயரியா போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் டெட்டோல் முன்னெடுக்கும் சர்வதேச செயற்திட்டமான தமது தூய கைகளின் (#handfie) படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யும் செயற்பாட்டில் இலங்கையர்களையும் பங்குபற்றுமாறு டெட்டோல் அழைப்புவிடுத்துள்ளது.
ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதிலிருந்தும் சுமார் 2000 சிறுவர்கள் தவிர்க்கப்படக்கூடிய நோய்கள் காரணமாக உயிரிழக்கின்றனர். இதில் டயரியாவும் ஒன்றாக அமைந்துள்ளது. ஒவ்வொரு நிமிடத்திலும் ஒரு பெற்றோர் தமது குழந்தையொன்றை பறிகொடுத்து வருகின்றனர். அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் அதிகளவு உயிரிழப்பை ஏற்படுத்தும் இரண்டாவது காரணியாக டயரியா அமைந்துள்ளது. ஆனாலும், இந்த உயிரிழப்புகள் சவர்க்காரம் கொண்டு கைகளை கழுவுதல் எனும் இலகுவான முறையின் மூலம் தவிர்க்கப்படக்கூடியவை. இந்த செயற்பாடு கிருமிகள் தொற்றை தவிர்ப்பதுடன், டயரியாவை ஏற்படுத்தும் கிருமிகள் பரவுவதை தவிர்ப்பதாகவும் அமைந்துள்ளது.
சர்வதேச தூய்மைக்கான சம்மேளனத்தின் தலைவரும் குயின் மேரிஸ் மருத்துவ பாடசாலையின் வருகை தரும் பேராசிரியருமான ஜோன் ஒக்ஸ்பேர்ட் கருத்து தெரிவிக்கையில், 'டயரியா போன்ற வேகமாக பரவும் நோய் காரணமாக உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு உயர்வாக காணப்படுகிறது. இது சர்வதேச ரீதியில் பெரும் சிக்கலான நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், டயரியா என்பது தவிர்க்கப்படக்கூடியது. இதற்காக நாம் சிறந்த கைச் சுகாதாரத்தை பேணுவதன் மூலம் எம்மையும், எமது குடும்பத்திலுள்ளவர்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். முக்கியமாக, சவர்க்காரத்தைக் கொண்டு கைகளை கழுவிக் கொள்வது என்பது அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்துள்ளது. தொற்றுக்களிலிருந்து தவிர்ப்பது மற்றும் அநாவசியமான உயிரிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்' என்றார்.
இதன் காரணமாக, டெட்டோல் தனது செயற்பாடுகளை புதுப்பித்து, கைகளை கழுவும் செயற்பாட்டின் மூலம் உயிரூட்டுவது எனும் செயற்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கைகளை கழுவுவதன் மூலம் தவிர்த்துக் கொள்ளக்கூடிய டயரியா போன்ற நோய்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளது. குழந்தைகள் மத்தியில் கைகளை கழுவுதல் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அதிகளவு உயிர்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதுடன், எவ்விதமான தடுப்பூசிகளையோ மருந்துகளை வழங்குவதையும் தவிர்த்துக் கொள்ள முடியும். இதன் அடிப்படையில் சமூக இணையத்தளங்களில் பகிர்ந்து கொள்ளப்படும் ஒவ்வொரு தூய கைகளின் படத்துக்கும் (#handfie) தலா ஒவ்வொரு குழந்தை வீதம் ஆரோக்கியமான கைகளை கழுவிக் கொள்ளும் பழக்கம் தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன. அதிகளவு பகிரப்படும் (#handfie) படங்களுக்கமைய, அதிகளவு குழந்தைகளுக்கு விளக்கங்கள் வழங்கப்படும்.
சர்வதேச கைகளை கழுவும் தினமான (2014 ஒக்டோபர் 15ஆம் திகதி) அன்று, தனது விழிப்புணர்வு செயற்பாடுகளை ஆரம்பிக்க டெட்டோல் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக உலகம் முழுவதும் பரந்து காணப்படும் பாடசாலைகளில் கைகளை கழுவும் நிகழ்ச்சிகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. சீனா, இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், மெக்சிகோ, ஆர்ஜென்டீனா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் ஆரோக்கிய கோலை ஒரு நாட்டிலிருந்து மறு நாட்டுக்கு வழங்குவதன் மூலமாக உலகின் மிகவும் நீளமாக கைகளை கழுவும் அஞ்சலாக பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சர்வதேச பாடசாலைகளுடன் இணைந்து கைகளை கழுவுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதுடன், குழந்தைகள் மத்தியில் கைகளை கழுவும் பழக்கத்தை மேம்படுத்தவும் டெட்டோல் திட்டமிட்டுள்ளது.
உலக சுகாதார தாபனத்தின் இலங்கைக்கான தேசிய ஆலோசகர் வைத்தியர். சரத் சமரகே கருத்து தெரிவிக்கையில், 'பக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்ற நுண்ணங்கிகள் போன்றவற்றை கடத்தும் பிரதான அங்கமாக கைகள் அமைந்துள்ளன. இவற்றின் காரணமாக டயரியா போன்ற கொடிய நோய்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, இலங்கையையும் உலக நாடுகளையும் சேர்ந்த பொது மக்கள் ஆரோக்கியமான கைகளை பேணுவதற்கான பழக்க வழக்கங்களை பின்தொடர்வது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீர் மற்றும் சவர்க்காரத்தை கொண்டு அடிக்கடி கைகளை கழுவிக் கொள்வது என்பது இதில் அடங்குகிறது. எனவே இந்த திட்டத்துடன் அனைத்து இலங்கையர்களையும் இணைந்து கொள்ளுமாறு நான் அழைப்பதுடன், டயரியாவிலிருந்து விடுபட்டு உயிரிழப்புகளை தவிர்த்துக் கொள்ள இணையுமாறும் தெரிவிக்கிறேன்' என்றார்.
சர்வதேச கைகளை கழுவும் தினம் 2014 ஐ முன்னிட்டு, டெட்டோல் இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு கைகளை கழுவுவது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், முறையான நுட்பங்களையும் பயிற்றுவிக்க திட்டமிட்டுள்ளது. கைகளை கழுவும் விழிப்புணர்வு திட்டத்தின் மூலமாக, டெட்டோல் ஆரோக்கியமான கைகளை கழுவும் பழக்கத்தை ஊக்குவித்து, சுகாதாரத்தை பரப்ப திட்டமிட்டுள்ளது.
.jpg)