2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஓய்வூதியம் பெறுவோருக்கு டிஜிட்டல் அடையாள அட்டை

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 13 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓய்வூதியம் பெறுவோருக்கு டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கும் செயற்றிட்டத்தை சம்பத் வங்கியுடன் இணைந்து இலங்கையின் ஓய்வூதிய திணைக்களம் ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக சுமார் 600,000க்கும் மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் அனுகூலம் பெறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் நாட்களில் சம்பத் வங்கி கிளைகளினூடாக இந்த அடையாள அட்டைகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. 
 
வங்கியின் மூலமாக ஓய்வூதிய திணைக்களத்துக்கு 25 கணினிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் திணைக்களத்துடன் நேரடி தொடர்புகளை இலகுபடுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X