2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வியாபாரம் முன்னெடுக்கக்கூடிய சூழல் தரப்படுத்தலில் இலங்கை பின்னடைவு

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 30 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

2013 – 2014 காலப்பகுதியில் வியாபாரம் முன்னெடுக்கக்கூடிய சூழல் நிலவுகின்றமை தொடர்பிலான தரப்படுத்தலில் இலங்கை 85 ஆம் நிலையிலிருந்து 99 ஆம் நிலைக்கு பின்னடைந்துள்ளது. உலக வங்கி குழுமத்தின் மூலமாக உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் இந்த தரப்படுத்தலில் இலங்கை இவ்வாறு பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. 
 
'வியாபார முன்னெடுப்பு 2015' எனும் உலக வங்கியின் அறிக்கைக்கு அமைவாக, 189 நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் காணப்படும் நீதி மற்றும் சட்ட ஒழுங்கு விதிமுறைகள் வியாபாரங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு சாதகமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், வியாபாரங்களுக்காக அறவிடப்படும் வரி உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
உலகளாவிய ரீதியில் வியாபாரத்தை முன்னெடுக்க மிகவும் மோசமான நாடாக டுனீசியா அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X