.jpg)
கொழும்பு பங்குச்சந்தை அண்மைக்காலமாக உயர் பெறுமதிகளை பதிவு செய்த வண்ணமுள்ளது. வங்கிகளின் வட்டி வீதங்கள் குறைவடைந்துள்ள நிலையில், கொழும்பு பங்குச்சந்தையில் முதலீடுகளை மேற்கொண்டு, சிறந்த இலாபத்தை தேடிக் கொள்வது எவ்வாறு என்பது குறித்து விளக்கங்களை பெற்றுக் கொள்ளக்கூடிய இலவச கருத்தரங்கு ஒன்று யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
இந்த கருத்தரங்கின் போது பொருளாதாரத்தின் பணவீக்கப் போக்கும், வட்டி வீதக் கொள்கைகளும், பங்குச்சந்தையும், புதிய வரவு செலவுத்திட்ட (2015) அறிமுகமும், பங்குத் தெரிவுகளும் பொருத்தமான தீர்மானமும், பங்குச்சந்தையின் போக்கும், அதன் நிலைத்திருக்கும் சந்தர்ப்பங்களும், பொதுவான தவறுகளும் அதனைத் தவிர்க்கும் வழிமுறைகளும் போன்ற விடயங்களை அறிந்து கொள்ள முடியும்.
கொழும்பு பங்குச்சந்தை யாழ்ப்பாண கிளையின் கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணி முதல் இடம்பெறவுள்ள இந்த கருத்தரங்கில் இலங்கை நம்பிக்கை அலகுகள் நிதியத்தின் அதிகாரியான பி.அசோகன் ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்கவுள்ளார்.
மேலதிக விபரங்களை கொழும்பு பங்குச்சந்தை, யாழ் கிளை, கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம், 0212221455 அல்லது 0777822014 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.