2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சம்மாந்துறையில் ஹட்டன் நெஷனல் வங்கிக் கிளை திறப்பு

Kogilavani   / 2014 நவம்பர் 10 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா

புனரமைக்கப்பட்டு தரமுயர்த்தப்பட்ட சம்மாந்துறை ஹட்டன் நெஷனல் வங்கிக் கிளையின் திறப்பு விழா திங்கட்கிழமை (10) சம்மாந்துறை ஹிஜ்றா சந்தி ஹட்டன் நெஷனல் வங்கிக் கிளை வளாகத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை ஹட்டன் நெஷனல் வங்கிக் கிளையின் முகாமையாளர் ஏ.எல்.றியாசுதீன்; தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஹட்டன் நெஷனல் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் லக்மால் பெரோரா, கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தித்துறை சமூக சேவைகள் கூட்டுறவுத்துறை மகளிர் அபிவிருத்தி விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், ஹட்டன்; நெஷனல் வங்கியின் உதவிப் பொது முகாமையாளர் றொஹான் தம்பிராஜா, கிழக்கு மாகாணத்துக்கான பிராந்திய தலைமை அதிகாரி சீ.ஜெகராஜா, பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இஇதன்போது உரையாற்றிய வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் லக்மால் பெரோரா,

'சம்மாந்துறையில் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் கல்முனைக் கிளையின் இணைந்த வாடிக்கையாளர் சேவை நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டு சேவையில் இருந்த வந்தது.

இந்தப் பிரதேசத்திலுள்ள சகல தரப்பினருக்கும் ஏற்ற வகையில் அவர்களது பிரதான தொழில் முறைகளுக்கு ஏற்ப எமது நிறுவனம் செயற்பட நவீன வசதிகளை வாடிக்கையாளர்களுக்காக ஏற்றடுத்தியுள்ளது' என்று தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X