
கிருமிகள் மற்றும் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு ஊடாக தினசரி அடிப்படையில் ஆரோக்கியமான மற்றும் தூய வீட்டினை உருவாக்க வேண்டியமை மிக முக்கியமாகும். லைசோலின் புதிய பல்நோக்கு தூய்மையாக்கியானது வீட்டின் அனைத்து பரப்புகளிலும் பயன்படுத்த மிகச் சிறந்தது.
லைசோலின் பல்நோக்கு தொற்றுநீக்கியானது, இலங்கையில் தாய்மார்கள் மற்றும் குடும்பத்தலைவிகளுக்கு தங்களது குடும்பங்களின் பாதுகாப்பு தொடர்பில் நம்பிக்கை வைக்கக்கூடிய பரிசோதிக்கப்பட்ட தூய்மையாக்கியாக திகழ்கிறது.
லைசோலின் சக்திமிக்க தூய்மையாக்கியானது, நாளாந்தம் படியும் அழுக்குகள் மற்றும் கிரீஸ்களை நீக்கி 99.9% வீதமான கிருமிகளை அகற்றுவதுடன், சாதாரணமான பினைலினை விட பத்து மடங்கு செயற்திறன் மிக்கதாக தொழிற்படக்கூடியது.
பக்ரீயாக்களினால் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கி அனைத்து மேற்பரப்புகளிலும் புத்துணர்ச்சியான நறுமணத்தை வழங்குவதுடன், ஒன்று அல்லது இரண்டு நாளிற்கு நீடிக்கச் செய்கிறது. இந்த நறுமணம் தங்களது வீடு உண்மையாகவே சுத்தமாக உள்ளது என்ற தன்னம்பிக்கையை தாய்மாருக்கு வழங்குவதாக அமைந்துள்ளது.
'லைசோல் தூய்மையான, சுகாதாரமான சுற்றுச்சூழலை பேணுவதற்கு தேவையான கருவிகளை குடும்பங்களுக்கு வழங்குகிறது. சுத்தம் செய்வதை தாண்டி சக்திமிக்க தூய்மையை வழங்குவதற்கு குடும்பங்களுக்கு உதவுவதை நாம் உறுதிப்படுத்துகிறோம்' என லைசோல் வர்த்தகநாமத்தின் சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளர் ருச்சிர மணி தெரிவித்தார்.
லைசோலின் பல்நோக்கு தூய்மையாக்கியானது, அன்னையர் மற்றும் குடும்பத்தலைவிகள் மத்தியில் countertops, சிங்க்குகள், அடுப்பின் மேற்பாகங்கள், அலுமாரிகள், குளிர்சாதன பெட்டியின் வெளிப்புறம், பாத் டப், குளியலறை தொட்டி, ஷவர் கதவுகள் மற்றும் கழிப்பறை தொட்டியின் வெளிப்புறம் ஆகியவற்றில் படிந்துள்ள அழுக்குகள், கிரீஸ் மற்றும் சவர்க்கார அழுக்குகள் போன்றவற்றை நீக்குதல் உள்ளிட்ட வீட்டின் அனைத்து பரப்புகளிலும் பயன்படுத்த முடிகிறது. மேலும் ஃளோரல், பைன், லெவண்டர் மற்றும் சிட்ரஸ் போன்ற இயற்கை நறுமணங்களை கொண்டுள்ள இந்த உற்பத்தி, அறைகளில் இனிய நறுமணத்தால் பரவச் செய்கிறது.
'வீட்டுச்சூழலை பாதுகாப்பது என்பது மிகப்பெரிய சவாலாகும். கிருமித் தொற்றுக்களை அழிப்பதற்கு சுத்தப்படுத்தல் மற்றும் தொற்றுநீக்கல் ஆகியன முக்கிய படிமுறையாகும். முன்னணி சுகாதார பிரச்சனைகளை சுட்டிக்காட்டும் எமது புத்தாக்கங்களை தொடர்ந்து, சந்தையில் சிறந்த பல்நோக்கு தூய்மையாக்கிகள் மற்றும் சுகாதார உற்பத்திகளை அறிமுகம் செய்வதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
எமது வாடிக்கையாளர்கள் தற்போது நோய்கள் மற்றும் கிருமிகள் பரவுவதை தவிர்ப்பதற்கு இலகுவாக தினசரி சுகாதார மதிப்பீடுகளை மேற்கொள்ள முடியும்' என ரெக்கிட் பென்கீசர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வர்த்தக பணிப்பாளர் சிங்க்கௌயர் க்ரூஸ் தெரிவித்தார்.
ஆரோக்கியமான இல்லங்களை பேணுவதற்கான சில வழிமுறைகள்:
• சுத்தப்படுத்தல் மற்றும் தொற்றுநீக்குதலுக்கு இடையிலான வேறுபாட்டினை அறிந்திருத்தல். சுத்தப்படுத்தலின் மூலம் மேற்பரப்பிலுள்ள கண்ணுக்கு தெரியும் எண்ணெய் வகைகள், அழுக்குகள் நீக்கப்படுகின்றன. பொதுவாக சவர்க்காரம் மற்றும் தண்ணீர் கொண்டு மேற்பரப்பு துடைத்தெடுக்கப்படுகிறது. தொற்றுநீக்கி மூலமே வைரஸ், பக்ரீயாக்கள் மற்றும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.
• கிருமித்தொற்று ஏற்பட முன்னர் எப்போதும் சுத்தப்படுத்தவும். தூய்மையான மேற்பரப்பில் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. பக்ரீயாக்கள் மறைந்து கொள்ளவதற்குரிய சிறந்த இடம் அழுக்கு ஆகும். எனவே, கிருமிநீக்கம் செய்ய முன்னர் மேற்பரப்பினை நன்கு சுத்தம் செய்தல் வேண்டும்.
•
சரியான உற்பத்தியை தெரிவு செய்யவும். சந்தையில் பல உற்பத்திகள் காணப்படுவதால் சிறந்த செயற்திறன் கொண்ட உற்பத்திகளை தெரிவு செய்வது மிகவும் கடினமாகும். சுத்தம் செய்தல் மற்றும் தொற்றுநீக்கியின் போது கிருமிகளை அழித்து துர்நாற்றத்தை குறைக்கும் ஒரு உற்பத்தியை தேர்ந்தெடுக்கவும்.
.jpg)