
சர்வதேச நீரிழிவு தினம் 2014 ஐ முன்னிட்டு, சன்ஷைன் ஹெல்த்கெயார், அதன் முழு குழுமத்தில் நவம்பர் 14ஆம் திகதியை சர்க்கரை அற்ற தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. சன்ஷைன் ஹெல்த்கெயார் நிறுவனம் இலங்கை நீரிழிவு சங்கத்துடன் இணைந்து, இலங்கையில் நீரிழிவு தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வந்துள்ளது.
ஆரம்பத்தில் மேலைத்தேய நாடுகளில் மட்டுமே அதிகளவில் காணப்பட்ட நீரிழிவு நோய், தற்போது உலகம் முழுவதும் பரவலாக காணப்படுவதுடன், தென்கிழக்காசிய நாடுகள் இந்த நோயினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நீரிழிவு சம்மேளனத்துக்கு (IDF) அமைவாக, உலகின் ஐந்தில் ஒரு வயதுவந்த நீரிழிவு நோயாளர்கள் தென்கிழக்காசிய நாடுகளில் வசிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சன்ஷைன் ஹெல்த்கெயார் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி பேர்னாட் ஜோசப் கருத்து தெரிவிக்கையில், 'நீரிழிவு என்பது எவரையும் பாதிக்கக்கூடியது. இலங்கையை பொறுத்தமட்டில் இது தற்போது அதிகளவானவர்களின் கவனத்தை ஈர்த்த விடயமாக அமைந்துள்ளது. இருந்த போதிலும், மக்கள் இந்த நோய் பற்றி அதிகளவு சிந்திப்பதில்லை. இதன் காரணமாக, இலங்கையர்கள் மத்தியில் நீரிழிவு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்திட்டத்துக்கு இணை அனுசரணை வழங்க நாம் தீர்மானித்தோம்' என்றார்.
இலங்கையில் தற்போது வாழ்க்கைமுறையில் மாற்றம் ஏற்பட்டு வருகின்றமையால், நீரிழிவு நோய் என்பது அதிகளவில் காணப்படுகின்றது. 2050 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 25 வீதமானவர்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நோய், நபர் ஒருவரின் உடல் நலனை பாதிப்பதுடன், வாழ்க்கைத்தரத்தையும் பாதிப்பதாக அமைந்துள்ளது. முற்றிலும் உள்நாட்டு நிறுவனம் எனும் வகையில், சன்ஷைன் ஹெல்த்கெயார் என்பது இலங்கையின் சனத்தொகையின் நலன்புரி செயற்பாடுகளில் அதிகளவு கவனம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனம் பல்வேறு வகையான நீரிழிவு குணப்படுத்தும் சிகிச்சைகளையும் உள்நாட்டு தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான தடுப்பு முறைகளையும் வழங்கி வருகிறது.
சன்ஷைன் ஹெல்த்கெயார் நிறுவனம், நீரிழிவு தொடர்பான மருந்துப்பொருட்களையும் சாதனங்களையும் இலங்கையில் இறக்குமதி செய்வதில் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது. இதில், Zydus Cadilla இலிருந்து (Bigsens XR), Fourrts இலிருந்து Metformin Instant Release(Obmet), Zydus Cadilla இலிருந்து Glimiperide (Euglim), Unison இலிருந்து Gliclazide (Glucozide), Cassel இலிருந்து Repaglenide(Paglimide), Novo Nordisk இலிருந்து Insulin(Mixtard & Novo Mix), Johnson & Johnson இலிருந்து Glucometer மற்றும் strips (One Touch) ஆகிய சுய கண்காணிப்பு குருதி குளுக்கோசு முறைமைகள் போன்றன உள்ளடங்கியுள்ளன. சன்ஷைன் ஹெல்த்கெயார் தனது முழுமையான 100 வீத உரிமையாண்மையை பெற்ற ஹெல்த் கார்ட் பார்மசி ஊடாக பெருமளவான மருந்துப்பொருட்களை சகாயமான விலையில் பெறுமதி சேர்ப்புடன் வழங்கி வருகிறது.
இலங்கையில் மிகவும் கௌரவத்துக்குரிய பெருநிறுவனங்களுள் ஒன்றாக சன்ஷைன் ஹோல்டிங்ஸ் விளங்குகிறது. இந் நிறுவனம் சுகாதாரப்பராமரிப்பு, விவசாயம் மற்றும் துரிதமாக நகரும் நுகர்வு பொருட்கள் போன்ற துறைகள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன் குழுமத்தைச் சேர்ந்த அனைத்து துணை நிறுவனங்களும் நவம்பர் மாதம் முழுவதும் குறித்த சமூகங்கள் மத்தியில் நீரிழிவு தடுப்பு செய்தியை பரப்புவதற்காக கைகோர்த்திருந்தது.
உலக நீரிழிவு தினம் என்பது ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தினத்தில், நீரிழிவின் பாதிப்புகள் மற்றும் அவற்றின் சிக்கல் நிலைகள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறிக்கோளாக அமைந்துள்ளது. உலக நீரிழிவு தினம் 2014 செயற்திட்டம், மூன்றாண்டுகளுக்கு (2014-2016) இடம்பெறவுள்ளது. இவ்வருடம் முதல் தடவையாக இது இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.