
இயந்திர சாதனங்களின் பராமரிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் யுனைட்டட் டிராக்ட்ர்ஸ் அன்ட் எக்கியுப்மன்ட் (UTE) பிராந்திய மட்டத்தில் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்திருந்தது. அண்மையில் இந்த கருத்தரங்கு இரத்தினபுரி, பெல்மடுல்ல பகுதியில் இடம்பெற்றது.
வியாபாரங்கள் இயற்கையாகவே போட்டிகரத்தன்மை வாய்ந்தனவாக அமைந்திருப்பது என்பது எந்தவொரு நிறுவனமும் துரிதமாக செயலாற்றி பொறுப்பு வாய்ந்த சேவையை வழங்கும் திறனை கொண்டிருப்பது என்பது மிகவும் கட்டாயமானதாக அமைந்துள்ளது.
இதை கருத்தில் கொண்டு, கட்டர்பில்லர் சாதனங்களின் நீடித்த பாவனையை உறுதி செய்து, அதன் மூலம் நீண்ட கால அடிப்படையில் பெறுமதிகளை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில், UTE இனால் தொடர் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
Cat பராமரிப்பு கருத்தரங்குகள் அசல் உதிரிப்பாகங்களின் பாவனையின் அனுகூலம் மற்றும் அவற்றின் பராமரிப்பின் முக்கியத்துவம் தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தப்பட்டிருந்தன. பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களுடன் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக உரையாடக்கூடிய வாய்ப்பு கிடைப்பதுடன், இதன் மூலம் பெறுமதி வாய்ந்த விபரங்களையும் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் கிடைத்திருந்தது.
UTE இன் பொருட்கள் உதவி சேவைகள் பிரிவின் பொது முகாமையாளர் எச். ஆர். ரணசிங்க கருத்து தெரிவிக்கையில், 'எந்தவொரு திட்டத்துக்கும், நேர காலத்தில் வேலைகளை பூர்த்தி செய்வது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஒப்பந்தக்காரருக்கு பெருமளவு சேமிப்பை வழங்கும் வகையில் அமைந்திருப்பதுடன், சாதனம் செயலிழந்து காணப்படும் வேளையை குறைக்கும் வகையில் அமைந்திருப்பதுடன், வினைத்திறன் வாய்ந்த நேர முகாமைத்துவத்தை வழங்கும் வகையில் பராமரிப்பு செயற்பாடு என்பது அமைந்திருக்கும். தவிர்க்க முடியாத நிலைகளின் காரணமாக, ஒப்பந்தக் காரரினால் திட்டமொன்று தாமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டால், இது பொது மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும் என்பதுடன், பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் அமைந்திருக்கும்' என குறிப்பிட்டார்.
UTE, தமது வாடிக்கையாளர்களுக்கு பராமரிப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் பரிந்துரைப்பதாக ரணசிங்க குறிப்பிட்டார். இந்த திட்டத்துக்கு அமைவாக கட்டர்பில்லர் சாதனங்கள் மற்றும் ஜெனரேற்றர்கள் உற்பத்தியாளரின் பயிற்றுவிக்கப்பட்ட தொழில்நுட்ப அதிகாரிகளின் பேணப்படும் தராதரங்களுக்கு அமைவானதாக முறையாக பேணப்படும்.
முறையாக பேணப்பட்ட சாதனங்கள் சிறந்த மூலதனத்தின் மீது வருவாயை பெற்றுக் கொடுக்கும் வகையில் உயர் மீள் விற்பனை பெறுமதியை ஒப்பந்தக்காரருக்கு வழங்கும் வகையில் அமைந்திருக்கும்.
நவகமு ஹேன தேயிலை தொழில்ற்சாலை உரிமையாளர் ஜயவர்தன இந்த கருத்தரங்கில் அண்மையில் பங்கேற்றிருந்தார். இவர் கருத்து தெரிவிக்கையில், 'இயந்திர உரிமையாளர்களின் மூலமாக இந்த கருத்தரங்குகள் அதிகளவு வரவேற்கப்படுகின்றன. இவை அதிகளவு தகவல்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளதுடன், தொழில்நுட்ப விபரங்களையும், உற்பத்தி திறன் வாய்ந்த முகாமைத்துவ கட்டமைப்புகளை பேணவும் இவை உதவியாக அமைந்திருக்கும்' என்றார்.
இந்த ஆண்டு UTE முன்னெடுத்திருந்த மூன்றாவது பிராந்திய கருத்தரங்கு இதுவாக அமைந்திருந்தது. அனுராதபுரம் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் இது போன்ற மேலும் பல கருத்தரங்குகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அர்ப்பணிப்பான அணியினருடன் மற்றும் முன்னிலை ஊழியர்களுடன் தயாரிப்புகள் தொடர்பான சேவைகளை வழங்கும் சாதனங்களின் ஒரே விநியோகிப்பாளராக UTE திகழ்கிறது. இவர்கள் அடிக்கடி வாடிக்கையாளர்களின் பகுதிகளுக்கு விஜயம் செய்து Cat சாதனங்களை மேற்பார்வை செய்வதுடன், பராமரிப்பு ஆலோசனைகளையும் வழங்குகின்றனர்.