
இலங்கையில் தகவல் தொழில்நுட்பம், வணிகம் மற்றும் பொறியியல் கற்கைகளை வழங்குவதில் முன்னணியில் திகழும் கல்வியகமான SLIIT, 2014 / 2015 கல்வியாண்டுக்காக புதிய மாணவர்களை வரவேற்றிருந்தது. இந்த நிகழ்வில் 4000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றிருந்ததுடன், மாலபே கல்வி நிலையத்தில் இடம்பெற்றிருந்தது. SLIIT கல்வியகத்தின் நிர்வாகிகள், புதிதாக இணைந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
புதிய ஆண்டுக்கான வகுப்புகள் ஒக்டோபர் 28ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தன. 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமது உயர்கல்வி வாய்ப்புகளை பெற்றிருந்தனர். மாணவர்களை வரவேற்கும் வைபவங்கள் ளுடுஐஐவு இன் கண்டி மற்றும் மாத்தறை கிளைகளில் இடம்பெற்றிருந்தன.
உலகின் வௌ;வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களுடன் உறுதியான இணைப்பை கொண்டுள்ள SLIIT, 9000 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை தகவல் தொழில்நுட்பம், வணிகம் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளில் உருவாக்கியுள்ளது. மேலும் நாட்டில் காணப்படும் ஐம்பது வீதத்துக்கும் மேலான தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் SLIIT இல் தமது உயர் கல்வியை பூர்த்தி செய்தவர்களாக அமைந்துள்ளனர்.