2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

2015 வரவு - செலவுத்திட்டம் குறித்து வெவ்வேறு கருத்துகள்

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 28 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத்திட்டம் தொடர்பில் வெவ்வேறு அமைப்புகள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளன. 
 
தேசிய வர்த்தக சம்மேளனம் இந்த வரவு - செலவுத் திட்டத்தை வரவேற்றுள்ளதுடன், நீண்ட கால அடிப்படையில் திட்டமிடப்பட்டு, உள்நாட்டு வர்த்தகங்களுக்கும் வியாபாரங்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் சர்வதேச தரப்படுத்தல் அமைப்பான மூடிஸ் கருத்துப்படி, 2015ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்ந்து நிதிப்பற்றாக்குறை குறைப்பு வகையில் அமைந்துள்ளதாக அறிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டை பொறுத்தமட்டில் அதிகார அமைப்புகள் தமது நிதிப்பற்றாக்குறையை சிறந்த முறையில் கட்டுப்படுத்தியுள்ளன. அடுத்த ஆண்டில் இந்த பெறுமதியை மேலும் குறைக்க முடியுமாயின் நாட்டுக்கு சிறந்த தரப்படுத்தலை பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும் என அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X