2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

2015இல் மரக்கறி, பழங்கள் ஏற்றுமதி மூலம் 88 மில்லியன் அமெ.டொலர்களை வருமானமாக திரட்ட திட்டம்

A.P.Mathan   / 2013 நவம்பர் 06 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஆண்டுகளில் இலங்கையின் மரக்கறி மற்றும் பழங்கள் ஏற்றுமதியில் மரவள்ளி மற்றும் வாழை அதிகளவு பங்களிப்பை வழங்கியுள்ளன. பாரிய வர்த்தக நிலப்பரப்புகளில் இவை பயிரிடப்படுவதன் மூலம் தொழிற்துறையின் வளர்ச்சியலும் பங்களிப்பு வழங்கியுள்ளது என இலங்கை பழங்கள் மற்றும் மரக்கறி உற்பத்தியாளர்கள் பதப்படுத்துநர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் உதவி தலைவர் இந்திரா மல்வத்த தெரிவித்தார்.
 
2015ஆம் ஆண்டளவில் இந்த துறையின் மூலம் மொத்த ஏற்றுமதி வருமானமாக 88 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டிக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 2012ஆம் ஆண்டில் இந்த பெறுமதி 32 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
உலக வாழை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இலங்கை 50ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், மரவள்ளி ஏற்றுமதியிலும் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டு தற்போது 9ஆவது இடத்தில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .