2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மஞ்சி 'கமட சரண' சமூக பொறுப்புணர்வு திட்டம்

A.P.Mathan   / 2015 ஜனவரி 05 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


CBL நிறுவனம், அண்மையில் அதன் மஞ்சி சமக கமட சரண உள்கட்டுமான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 6 சமூக திட்டங்களை பூர்த்தி செய்துள்ளது. இத் திட்டத்தின் ஊடாக CBL நிறுவனம், இந்த வருடத்தில் மாத்திரம் 83இ765 மக்கள் நேரடியாக பயனடையக்கூடிய வகையில் நாடு முழுவதும் 87 சமூக பொறுப்புணர்வு திட்டங்களை பூர்த்தி செய்துள்ளது.

அண்மையில் பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களுள் 2,800 குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் தெனியாயவில் அமைக்கப்பட்ட சமூக மையம், பதுளை மற்றும் மொரவக பிரதேசத்திலுள்ள இரு பாடசாலைகளில் கற்கும் 650 மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வசதி, கெகிராவ நெல்லியகம மத்திய பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை கலை நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களை நடாத்துவதற்கு புதிய பாடசாலை அரங்கம், மஹியங்கனை பகரகம்மான முஸ்லீம் வித்தியாலயத்தைச் சேர்ந்த 250 மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுகூடம் மற்றும் தீகவாபி சிங்கள மகா வித்தியாலயத்தை சேர்ந்த 300 மாணவர்களுக்கு நவீன பாடசாலை வாசிகசாலை போன்றன உள்ளடங்குகின்றன.

மஞ்சி சமக கமட சரண உள்கட்டுமான அபிவிருத்தி திட்டமானது இலங்கையின் பின்தங்கிய கிராமிய சமூகத்தின் தேவைகளுக்கு உதவுவதுடன், நேரடியாக அதன் பயனை அடைபவர்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறது. இத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பான குடிநீர் வசதியற்ற சமூகங்களுக்கு சுகாதாரமான குடிநீர் வசதிகளை மஞ்சி ஏற்படுத்திக் கொடுக்கிறது.

மேலும் மஞ்சி ஆனது அடிப்படை உள்கட்டுமான வசதிகளை கொண்டிருக்காதவர்களுக்கு வீதிகள், பாலங்கள் மற்றும் சமூக நிலையங்களை நிர்மாணித்து கொடுக்கிறது. கமட சரண திட்டம் ஊடாக எதிர்கால சந்ததியினரின் அறிவு வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கும் முகமாக கல்வி நிலையங்கள், வாசிகசாலை, கணினி மற்றும் அறிவியல் கூடங்களையும் மஞ்சி அமைத்து கொடுக்கிறது.

எமது நிறுவனம் சமூகத்தின் நலனுக்கு பங்களிப்பு வழங்கி வருகிறது. ஏனெனில் வணிகம் என்பது வெறும் இலாபம் சார்ந்தது மாத்திரமல்ல. சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவுவதும் தான் என நிறுவனம் உணர்ந்துள்ளது' என குழு பணிப்பாளரும். சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவு தலைவருமான நந்தன விக்ரமகே தெரிவித்தார். எமது திட்டங்களில் 42% பாடசாலை சார்ந்ததாகவும், 29% வீதமானவை தூய்மையான குடிதண்ணீரை வழங்கும் முகமாகவும் அமைந்துள்ளது. இவை மிக எளிய விடயங்களாக தோன்றலாம். ஆனால் இவை நாம் உதவிடும் சமூகங்களிலுள்ள மக்கள் மத்தியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவல்லது' என்றார். 

சமூகத்தின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், CBL ஐச் சேர்ந்த சுமார் 500 கள அதிகாரிகள், உள்நாட்டு சமூக தலைவர்களுடன் கலந்துரையாடி சாத்தியமான திட்டங்கள் குறித்து இனங்கண்டு வருகின்றனர். அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் 5 திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. CBL நிறுவனமானது அதன் CSR முயற்சிகளின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ள சமூக பங்களிப்புக்கமைய சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயலாற்றி வருகிறது. 

இலங்கை முழுவதுமுள்ள பல்வேறு கிராமிய சமூகங்களுடன் இணைந்து CBL பணியாற்றி வருகிறது. பொறுப்பு வாய்ந்த வணிக நிறுவனம் எனும் ரீதியில், அதன் வளர்ச்சியை பகிர்ந்து கொள்வதிலும், CSR முயற்சிகள் ஊடாக அதனை சமூகத்திற்கு திருப்பி வழங்குதல் தொடர்பிலும் இந் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

இத்தகைய சமூகங்களின் நிலையான வளர்ச்சிக்கு உதவுவது தம் கடமை என்பதை CBL நன்குணர்ந்துள்ளது. இலங்கை சமூகத்தின் மீது நேர்மறையான தாக்கத்தை CBL ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் CBL நிறுவனமானது உள்நாட்டு சமூகத்தினருக்கு பெறுமதி சேர்க்கக்கூடிய CSR திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அனைத்து சமூகத்தினருக்கும் பயனளிக்கக்கூடிய நிலையான உள்கட்டுமான திட்டங்களை உள்ளடக்கிய பல்வேறு CSR திட்டங்களை CBL முன்னெடுத்துள்ளது.

மூன்று SLIM நிகழ்வுகளில் ஆண்டிற்கான சிறந்த CSR வர்த்தகநாம விருதினை மஞ்சி வென்றுள்ளது. கடந்த 2013 இல் சிறந்த சமூக சேவை திட்டத்திற்காக JESTICA வெள்ளி விருதினையும் வென்றிருந்தது. மேலும் இத் திட்டமானது சிறந்த கூட்டாண்மை குடிமகன் விருது வழங்கும் நிகழ்வில் இரு தடவைகள் சிறந்த உள்கட்டுமான திட்டமாக கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X