2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விரைவான உரிமைக்கோரல் தீர்வுகளை வழங்கும் ஜனசக்தி

A.P.Mathan   / 2015 ஜனவரி 07 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனசக்தி காப்புறுதி நிறுவனமானது அதன் ஃபுல் ஒப்ஷன் மோட்டார் கோரல் வாடிக்கையாளருக்கு சம்பத் பேங்க் கோர்ப்பரேட் பேமன்ட் சொலுஷன் (Sampath Bank Corporate Payment Solutions) மூலம் இயக்கப்படும் புரட்சிகரமான இலகுவான மொபைல் கேஷ் ஒப்ஷன் (mobile cash option) வழங்கி அதன் கோரல் கொடுப்பனவு சௌகரியத்தை மேம்படுத்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இதற்கமைய, நாடு முழுவதும் உள்ள 300 இற்கும் அதிகமான ATM வலையமைப்பை கொண்ட எந்தவொரு சம்பத் வங்கி ATM க்கும் சென்று வாடிக்கையாளர்கள் தமது உரிமைக்கோரல் கொடுப்பனவுகளை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.

'இதற்கு வரிசைகளில் காத்திருக்கவோ அல்லது காசோலைகளோ தேவையில்லை. உங்கள் இருப்பிடத்திற்கு அருகாமையில் இருக்கும் சம்பத் வங்கி யுவுஆ இற்கு விஜயம் செய்து மொபைல் கேஷ் ஒப்ஷனை கிளிக் செய்வதனூடாக ஃபுல் ஒப்ஷன் வாடிக்கையாளர்கள் தமக்குரிய கோரல் கொடுப்பனவுகளை பெற முடியும்' என ஜனசக்தி நிறுவனத்தின் ஃபுல் ஒப்ஷன் பிரிவின் சிரேஷ்ட உதவி பொது முகாமையாளர் எஸ்.தனஞ்செயன் தெரிவித்தார்.

இது விரைவான சேவையை அனுமதிப்பது மாத்திரமன்றி, உரிமைக்கோரல் கொடுப்பனவை பெறுவதற்கு சொந்தமாக வங்கி கணக்கொன்றை கொண்டிருப்பதற்கான தேவையையும் தவிர்க்கின்றது. பெரும்பாலான வாடிக்கையாளருக்கு நடைமுறை கணக்குகள் இல்லை. இந்த முறையானது கணக்கொன்று இல்லாமல் பணத்தை பெறுவதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நவீன வர்த்தகங்கள் காலத்துடன் இணைந்து செல்ல வேண்டும்' என மேலும் தனஞ்செயன் தெரிவித்தார்.

இந்த கைகோர்ப்பானது தபால் முறைமைகளையும், காசோலைகளையும் குறைப்பதுடன், கணிசமானளவு காகிதவேலைகளை குறைத்து, செயற்திறனை மேம்படுத்தச் செய்கின்றது. இதற்கு மேலதிகமாக, வாடிக்கையாளர்கள் இனிமேல் வங்கி திறந்திருக்கும் மணித்தியாலங்களில் மாத்திரம் கொடுப்பனவுகளை மேற்கொள்ளவோ அல்லது பெறவோ தேவையில்லை. தமது வசதிக்கேற்ப கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடிகிறது. 

'சௌகரியமான வேகம், குறைந்த காலதாமதம் மற்றும் காகிதவேலைகள் ஆகியவையே வாடிக்கையாளர்கள் ஜனசக்தி வர்த்தகநாமம் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் நம்பிக்கைக்கு வலுவான காரணங்களாக அமைந்துள்ளன. புத்துருவாக்கம் மற்றும் புதிய தயாரிப்பை வழங்குவதில் ஜனசக்தி என்றுமே சந்தை தலைமைத்துவத்தை கொண்டுள்ளது. எனவே சம்பத் பேங்க் கோர்ப்பரேட் பேமன்ட் சொலுஷன் உடனான இணைப்பு கனவுப் பிணைப்பாகும். இந்த நடவடிக்கையானது எமது சொந்த திறன் மற்றும் உற்பத்திதிறனை அதிகரிப்பதுடன், இறுதியாக அதிகமான கோரல்களை மேலும் விரைவாக வழங்க வழிவகுக்கும்' என ஜனசக்தி நிறுவனத்தின் மோட்டர் பிரிவின் சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளர் கௌஷலா அமரசேகர தெரிவித்தார்.

தமது உரிமைக்கோரல் கொடுப்பனவு தயாராகவுள்ளது என்பது SMS ஊடாக வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்படும். விசேட மொபைல் கேஷ் ஒப்ஷன் ஊடாக சம்பத் வங்கி ATM இயந்திர கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுவதால் ATM அட்டையை கொண்டிருப்பதான அவசியம் குறைகின்றது.

வாடிக்கையாளர் ATM இயந்திரத்தை பயன்படுத்த விரும்பவில்லை எனில், வாடிக்கையாளர் நேரடியாக வங்கிக்கு சென்று சம்பத் வங்கி கவுண்டர்களில் தமது கோரல் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

ஜனசக்தி ஃபுல் ஒப்ஷன் மூலம் 2013ஆம் ஆண்டு 4.4 பில்லியன் ரூபா உரிமைக்கோரல்கள் ஈடு செய்யப்பட்டுள்ளதுடன், அண்மையில் ஃபுல் ஒப்ஷன் நிலையமானது மோட்டர் துறையில் அதன் 10 ஆண்டுகால சேவையை கொண்டாடியது. ஜனசக்தியின் அர்ப்பணிப்பு மிக்க விரைவான அதிரடி தீர்வுகள் வழங்கும் படையானது கடுமையாக உழைத்து சுமார் 24 மணித்தியாலயத்தினுள் உரிமைக்கோரல் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதை உறுதி செய்து வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X