Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜனவரி 18 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் பொஸ்டன் நகரை தலைமையகமாக கொண்டியங்கும் சர்வதேச கொள்கை வகுக்கும் நிறுவனமான Stax, இலங்கையில் தனது பத்து வருட பூர்த்தியை இந்த ஆண்டு கொண்டாடுகிறது.
Stax நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ராஃபி முஷர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ருவிந்து பீரிஸ் மற்றும் பணிப்பாளர் கலாநிதி. குமுது குணசேகர ஆகியோர் இலங்கையில் Stax நிறுவனத்தின் வரலாறு தொடர்பில் உரையாற்றியிருந்தனர். அத்துடன், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் மற்றும் பொதுவாக ஆசிய பிராந்தியத்தில் முதலீடுகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் மற்றும் வளர்ந்து வரும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் வியாபாரத்தை நிறுவுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் உரையாடியிருந்தனர்.
ராஃபி முஷர் அவர்களின் கருத்துப்படி, சர்வதேச நிறுவனங்கள் வளர்ச்சியை பதிவு செய்வதற்கு உதவும் வகையிலான தரவு அடிப்படையிலான செயற்படுத்தக்கூடிய உள்ளாந்த விபரங்களை Stax வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு இலாபத்தை மேம்படுத்திக் கொள்வது தொடர்பில் கொள்கை அடிப்படையிலான ஆலோசனைகளை தனது இருபது வருட கால அனுபவத்துடன் வழங்கி வருவதுடன், கொள்கை ஆலோசனைகளை வழங்குவதில் முக்கிய நிறுவனமாகவும் Stax திகழ்கிறது, மூன்று முன்னணி சர்வதேச ஆலோசனை நிறுவனங்களுடன் (பொஸ்டன் கொன்சல்டிங் ஃபேர்ம், பெய்ன் மற்றும் மெக்கின்சி) நேரடியாக போட்டியிட்டு வருகிறது. தனது வாடிக்கையாளர் வரிசையில் 20 முன்னணி நிறுவனங்களில் 14 ஐயும், ஃபோர்ச்சூன் 500 நிறுவனங்களில் 27 ஐயும் தன்னகத்தே கொண்டுள்ளது.
'சர்வதேச நிறுவனங்கள் எம்மை வாடகைக்கு அமர்த்தி, அவர்களின் வளர்ச்சிக்கு அவசியமான நடைமுறைப்படுத்தக்கூடிய உள்ளார்ந்த தரவுகளை பெற்றுக் கொள்கின்றன. வளர்ச்சி மற்றும் இலாப மேம்படுத்தல் தொடர்பில் Stax சிறந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், நீங்கள் அணுகக்கூடிய தூரத்தில் நாம் உள்ளோம்' என முஷர் தெரிவித்தார்.
2005ஆம் ஆண்டில் இலங்கையில் Stax நிறுவனத்தை தாபிப்பதில் மக்கள் மற்றும் அணுகப்படாத வளங்களின் உறுதி மொழி போன்றன உதவியாக அமைந்திருந்தமை தொடர்பில் முஷர் விபரிக்கையில்,
'முழுமையாக ஒன்றிணைக்கப்பட்ட அணிகளின் மூலமாக எமது வாடிக்கையாளர்களுக்கு மேலதிக விபரங்களை பெற்றுக் கொடுப்பதற்கு உறுதுணையாக அமைந்திருந்தது. கொழும்பு அலுவலகம் என்பது அறிவுசார் வெளிக்கள செயற்பாட்டு நிறுவனம் அல்ல. அதிகளவு கவனம் என்பது பெறுமதி சேர்ப்பதில் வழங்கப்பட்டிருந்ததுடன், செலவீனத்தின் மீது காண்பிக்கப்படவில்லை. இந்த அறிவு பகிர்வின் மூலமாகவும், அனுபவ பகிர்வின் மூலமாக இரு தரப்புக்கும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. எமது இலங்கை அலுவலகத்தின் மூலமாக சிறந்த பொருளடக்க மற்றும் உள்ளார்ந்த விபரங்களை அமெரிக்க அணிகளுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. அமெரிக்க அணியினர் இலங்கை அலுவலகத்துக்கும் தென்கிழக்காசிய வாடிக்கையாளர்களுக்கும் துறையின் போக்குகள், சிறந்த வழிமுறைகள் மற்றும் இலாப வாய்ப்புகளை எவ்வாறு இனங்காண்பது பற்றிய விபரங்களை வழங்கக்கூடியதாக இருக்கும். கொழும்பிலுள்ள அதிகாரி ஒருவருடன் பணியாற்றுவதை போலவே, பொஸ்டன் மற்றும் சிகாகோ ஆகிய நகரங்களில் பணியாற்றும் அதிகாரிகளுடனும் நான் பணியாற்றி வருகிறேன்' என்றார்.
பிராந்தியத்தில் காணப்படும் வளர்ச்சி வாய்ப்புகள் தொடர்பில் முஷர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சர்வதேச மொத்த தேசிய உற்பத்தியில் ~30% ஐ ஆசியா தன்னகத்தே கொண்டுள்ளது. 2050 ஆம் ஆண்டளவில் இந்த பெறுமதி ~52% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரத் தேவைகளின் அதிகரிப்பு – உள்நாட்டு, பிராந்திய அல்லது பல்தேசிய எதுவாக இருப்பினும் நுகர்வோரின் செலவிடும் கொள்ளளவுக்கமைய அதிகரித்த வண்ணமுள்ளன. மாற்றம் மற்றும் வளர்ச்சி காணப்படும் எப்பகுதியிலும், மக்கள் அந்த மாற்றத்தை புரிந்து கொண்டு, வாய்ப்புகளை இலகுவாக இனங்காணக்கூடியவர்களாக இருக்க வேண்டும் - இதையே Stax மேற்கொள்கிறது.
'எப்பகுதியில் நீங்கள் வெற்றியீட்டலாம் என்பதை அறிந்து கொண்டு, எதிர்காலத்தில் எங்கு வெற்றியீட்டலாம் என்பதையும் அறிந்து கொண்டும் எவற்றை முற்றாக தவிர்க்கலாம் என தெரிந்து கொள்வதன் மூலமாக அதிகளவு பெறுமதியை சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் ஒரு நிறைவேற்று அதிகாரி அல்லது முதலீட்டாளராக இருக்கலாம். இதன் காரணமாகவே பெருமளவான பாரிய மற்றும் மத்தியளவு கம்பனிகளின் நிறைவேற்று அணிகள் Stax ஐ நாடுகின்றன' என நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி. குமுது குணசேகர தெரிவித்தார்.
பெருமளவு நிறுவனங்கள் போதியளவு நிதியின்மை நிலையை எதிர்கொண்டுள்ளன. இதுவே இவற்றின் வளர்ச்சிக்கு தடையாக அமைந்துள்ளது. நிதியை திரட்டிக் கொள்வதற்காக கடன் நிதியை பெற்றுக் கொள்ளல் அல்லது பொது பங்கு வழங்கல் முறையை பின்பற்றி வருகின்றன. ஆனாலும், ஒரு நிறுவனத்துக்கு இந்த முறை சிறந்த தீர்வாக அமைந்துவிடாது. நிறுவனங்களுக்கு தற்போது எப்பகுதியில் வாய்ப்புகள் காணப்படுகின்றன என்பதை மதிப்பீடு செய்து கொள்ள வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதனை தொடர்ந்து நிதியை பெற்றுக் கொள்ளக்கூடிய முறைகளை பற்றி ஆராயலாம் என குணசேகர குறிப்பிட்டார்.
உடனடியாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் நிறுவனமொன்றை பட்டியலிடுவதை விட, தனியார் பங்கு முதலீடுகள் போன்ற மாற்று நிதி திரட்டல் முறைகள் பற்றி கவனம் செலுத்துவதும் முக்கியத்துவம் வாய்;ந்தது என அவர் குறிப்பிட்டார். சிறியளவு மூலதனத்தை பெற்றுக் கொள்வது என்பது உறுதியாக வளர்ச்சி பெற்றுள்ள நிறுவனமொன்றுக்கு உயர் மதிப்பீட்டு பெறுமதியை பெற்றுக் கொள்வதற்கு உதவியாக அமையலாம். முதிர்ந்த, முறையாக திட்டமிடப்பட்ட கொழும்பு பங்குப்பரிவர்த்;தனையில் பட்டியலிடல் என்பது கம்பனிக்கும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனைக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
|சகல மூலதனமும் சமமானது எனும் தவறான அபிப்பிராயமும் நிலவுகிறது. வாடிக்கையாளர்களுக்கான Stax இன் இலக்கு என்பது, நிதியை மட்டும் பெற்றுக் கொடுக்கும் மூலதனத்தை பெறாமல், நிபுணத்துவம் வாய்ந்த, பௌதீக சென்றடைவு, பரந்த விநியோக மற்றும் விற்பனை வலையமைப்புடனான தொடர்பை ஏற்படுத்தல் மற்றும் உயர் பெறுமதியை பெற்றுக் கொடுப்பது போன்ற பல விடயங்களை உள்ளடக்கிய தீர்வை பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது' என கலாநிதி. குணசேகர மேலும் குறிப்பிட்டார்.
Stax என்பது கம்பனிகளுக்கு கொள்கைகளை வடிவமைப்பதில் உதவும் வகையில் அமைந்துள்ளதுடன், அதன் மூலம் வளர்ச்சியை எய்துவதற்கு வழிகாட்டியாகும் செயற்படுவதாகும். பாரம்பரிய முறைகளுக்கு அமையவின்றி Stax இன் கொள்கை என்பது உடனடியாக நிதியை திரட்டுவது என்பதாக அமைந்திராமல், காணப்படும் சகல வாய்ப்புகளை முதலில் ஆராய்வதாக அமைந்துள்ளது. இதன் மூலம் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் பொருத்தமான தீர்மானத்தை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
வினைத்திறன் வாய்ந்த மூலதனத்தை எதிர்பார்க்கும் வியாபாரங்கள் தமது நிறுவனத்தை வளர்ச்சிப்பாதையில் எவ்வாறு கொண்டு செல்வது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். அதன் பின்னர் முதலீட்டாளர்களுக்கு தமது முதலீடுகளை மேற்கொள்வதற்கு கவர்ச்சிகரமான மூலமாக தம்மை உருவாக்க வேண்டும். இதில் நிர்வாக செயலணியை தெளிவான சிந்தனையில் வளர்ச்சியை நோக்கி தயார்ப்படுத்துவதும் அமைந்துள்ளது. இரட்டை இலக்க வளர்ச்சியை காண்பிக்கும் கொள்கை திட்டமொன்றை தயாரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
'முதலீட்டாளர்களுக்கு பெருமளவு பணத்தை உறுதியான திட்டத்துடன் தூர நோக்கத்தையும் கொண்ட வியாபார நிறுவனங்களில் முதலீடு செய்ய கவனம் செலுத்துவார்கள். உங்கள் நிறுவனத்துக்கு கவர்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதில் உங்களுக்கும் உதவ Stax தயாராகவுள்ளது' என கலாநிதி. குணசேகர குறிப்பிட்டார்.
உறுதியான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கொண்ட பல நிறுவனங்கள் முறையான திட்டமிடல் மற்றும் இனங்காணல் இன்மையால் குறித்த வளர்ச்சியை எய்தாமல் போயுள்ளன என்பது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார். வினைத்திறன்வாய்ந்த மூலதனத்தை திரட்டிக் கொள்வதற்காக பங்குகளை விற்பனை செய்வது என்பது நிறுவனமொன்றை உயர் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லக்கூடியது என்பதுடன், நீண்ட கால அடிப்படையில் உயர் பெறுமதியை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக உள்ளது. வினைத்திறன் வாய்ந்த மூலதனத்தை இனங்காண்பது மற்றும் கவர்வது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பிராந்தியத்தில் காணப்படும் அணுகப்படாத வாய்ப்புகள், உள்நாட்டு கம்பனிகள் பின்பற்றக்கூடிய சில கொள்கை முறைகள் காணப்படுகின்றன. இவற்றை பின்பற்றி குறுகிய காலத்தில் அதிகளவு வளர்ச்சியை பெற்றுக் கொள்ளலாம். சகல வளர்ச்சியும் நிதியிடலின் மூலம் பெற்றுக் கொள்ளத்தேவையில்லை. வாய்ப்புகள் உள்ளகத்தில் காணப்படுகின்றன. Stax இன் செயற்பாடு என்பது நிறுவனத்தினுள் காணப்படும் வாய்ப்புகளை இனங்காண்பதாகவும் அமைந்துள்ளது. அவற்றை பரிந்துரைப்பதும் எமது செயற்பாடுகளில் ஒன்றாக அமைந்துள்ளது என பீரிஸ் தெரிவித்தார். இந்த இலாப மேம்படுத்தல் மூலமாக மேலதிக வாய்ப்புகளை நடைமுறைப்படுத்த உதவியாக அமைந்திருக்கும்.
Stax சேவைகள் தொடர்பில் மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள கலாநிதி. குமுது குணசேகர அவர்களை kumudug@stax.com எனும் மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளவும் அல்லது www.stax.com எனும் இணையத்தளத்தை பார்வையிடவும்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago