2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தேசிய சிறந்த வர்த்தக விருதுகளை வென்ற ஒரேன்ஜ் நிறுவனம்

A.P.Mathan   / 2015 ஜனவரி 23 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தேசிய சிறந்த வர்த்தக விருது 2014' என்ற விருது வழங்கும் நிகழ்வில் ஒரெல் கோர்பரேஷனின், ஒரேன்ஜ் இலெக்ரிக் நிறுவனம் அதிகமான தங்க விருதுகளை வென்றுள்ளது.

இந்த விருது வழங்கும் வைபவம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் கடந்த வாரம் இடம்பெற்றதோடு இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திருமதி Robyn Mudie கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது ஒரேன்ஜ் இலெக்ரிக் நிறுவனத்திற்கு தேசிய சிறந்த வர்த்தக விருது உட்பட ஐந்து தங்க விருதுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தேசிய சிறந்த வர்த்தக விருதிற்காக நிறுவனங்களை தெரிவு செய்யும் நடுவர் குழுவானது, அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் அளவுகோலான Malcolm Baldrige சிறந்த விருதுகள் முறைமைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட இந்த நிறுவனங்களினால் பின்பற்றப்படும் முறைமைக்கு ஏற்ப இலங்கை வர்த்தக சம்மேளனம், தேசிய சிறந்த வர்த்தக விருதினை வழங்க ஏற்பாடு செய்திருந்தது.

ஒரேன்ஜ் இலெக்ரிக் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளரும், தர உறுதிப்பாட்டாளருமான இந்திக்க வீரரத்ன கருத்து தெரிவிக்கையில், இந்த விருது வழங்கும் போது தலைமைத்துவம் மற்றும் நிறுவன ஆளுமை, திறன் வளர்த்தல், உள்ளுர் மற்றும் ஏற்றுமதி சந்தைக்கான வாய்ப்பு, நிதி மற்றும் வர்த்தக பெறுபேறுகள், சமூக பொறுப்புணர்வு மற்றும் சூழல் பேண் தகைமை உட்பட முக்கியமான ஏழு விடயங்களை மதிப்பீடு செய்தே வழங்கப்பட்டுள்ளது. 'இந்த ஏழு விடயங்களுக்கும் அப்பால் வர்த்தகத்திலுள்ள 80 உப பிரிவுகள் மற்றும் மேலும் 8 பிரிவுகளின் கீழ் இந்த விருதுக்காக தெரிவுகள் இடம்பெற்றன. நாம் இந்த 8 பிரிவுகளை உள்ளடக்கிய சிறந்த வர்த்தக குறியீட்டுக்காக இரண்டு தங்க விருதுகளை வென்றெடுத்துள்ளோம்.'

இதில் ஒட்டுமொத்த போட்டிக்கு வழங்கப்படும் தங்க விருது, கூட்டிணைந்த சமூக பொறுப்புணர்வு, வியாபாரத் திறன் மற்றும் நிதிசார் முடிவுகள், சிறந்த தயாரிப்பு – பொறியியல் துறை, உட்பட ஐந்து விருதுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரேன்ஜ் இலெக்ரிக் நிறுவனம் ஆசிய மீள் சுழற்சி கட்டமைப்புக்காக சமூக பொறுப்புணர்வு (CSR) விருதும், 'Light for me – Sight for You' என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக நாட்டிலுள்ள பார்வையற்றோருக் சிறந்த சேவைகளை 2007ம் ஆண்டு முதல் முன்னெடுத்துள்ளது.

வர்த்தக மற்றும் நிதிசார் முடிவுகளுக்கான பிரிவின் கீழ் 2014ஆம் ஆண்டில் வருமானத்தின் வளர்ச்சி வீதம் அதிகரித்திருந்தமை தெரியவந்ததோடு, இதன் வளர்ச்சி கடந்த ஆண்டை விட 50 சதவீதமாகும். அவர்களது ஏற்றுமதி விற்பனை வளர்ச்சியானது 20 சதவீதமாகும். மதிப்பீட்டு அடிப்படையில் வருவாய் வளர்ச்சி, இயக்க இலாப வளர்ச்சி, நிகர மற்றும் மொத்த இலாபம் வியாபாரத்தின் நிலையான தன்மையை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் இந்த விருது தொடர்பாக கருத்து தெரிவித்த ஒரெல் கோர்பரேஷனின் தலைவி திருமதி. திலக்கா ஆர். கொடிதுவக்கு கருத்து தெரிவிக்கையில், இந்த விருது எமது நிறுவனத்திற்கு கிடைத்தமையை முன்னிட்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 'நாம் சிறிதாகவே எமது தொழிற்சாலையை ஆரம்பித்தோம், நாங்கள் பெரிய அளவிலும்  மற்றும் இப்போது மிகப் பெரிய அளவிலும் முன்னேற்றமடைந்து எமக்கொரு இடத்தை பிடித்துக் கொண்டோம். இப்போது நிறுவனத்தின் வளர்ச்சியை என்னால் காண முடிவது மட்டுமல்லாமல் இது நாம் எட்டிய விசேட மைல் கல்லாகும். இந்த மிகச் சிறந்த சாதனைப் பயணத்தின் சிறப்பானது நிறுவனத்திற்கு மட்டுமல்ல எமது ஒட்டுமொத்த குழுவிற்கும் அதில் சேவை செய்யும் 1,500 துடிப்பான தொழிலாளர்களுக்கும் உரித்தாகுவதோடு அவர்களது கடின உழைப்பின் காரணமாக 6.5 பில்லியன் வருவாயை ஈட்டக் கூடிய நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளமைக்கு அவர்களும் காரண கர்த்தாக்கள் என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்' எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X