2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சரும நிறத்திற்கேற்ற உள்ளாடைத் தெரிவுகள்

A.P.Mathan   / 2015 ஜனவரி 27 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேர்த்தியான உள்ளாடைகளின் நவீன, புதுமையான தெரிவுகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டிரையம்ப நிறுவனம் அதன் Body Make-Up தெரிவுகளை கடந்த 2013இல் முதன்முதலாக அறிமுகம் செய்திருந்ததுடன், புத்துணர்ச்சியூட்டும் புதிய வகைகளை ஆண்டின் நடுப்பகுதியில் அறிமுகம் செய்திருந்தது. 

டிரையம்ப்பின் புதிய உள்ளாடைத் தெரிவுகள் வேடிக்கை, பெண்மை மற்றும் சௌகரியத்தை வழங்குவதாக அமைந்துள்ளது. பிங்க் பேர்ல், ஸ்வீட் லெவண்டர், கிறிஸ்டல் லெமன் போன்ற வர்ணத்தெரிவுகளில் இவை விற்பனைக்குள்ளதுடன், அணிபவருக்கு நொடிப்பொழுதில் தங்கள் சரும நிறத்திற்கு உகந்ததாக மாற்றமடையச் செய்கிறது.

LYCRA XTRA FINE பருத்தி அடங்கியுள்ள துணியினால் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய தெரிவுகள் அணிபவருக்கு சிறந்த தோற்றத்தை வழங்குவதுடன், சௌகரியமாகவும், கனமில்லாததாகவும் விளங்குகிறது. 

ரீ-சேர்ட் பிரா வகைகள் ஆடைகளின் கீழ் புலப்படாததாகவும், சிறந்த தோற்றத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு பொருத்தமான மென்மையான, மிருதுவான கப் பேட்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இவை சௌகரியத்தை வழங்குவதோடு, எல்லா அளவுகளிலும் கிடைக்கக் கூடிய இது சிறந்த தோற்றத்தை வழங்குகிறது. இந்த ரீ-சேர்ட் பிரா வகைகளை ரீ-சேர்ட்டுடனும், இறுக்கமான ஆடைகளுடனும் அணிய முடியும்.

Body Make-Up தெரிவுகள் உங்கள் சருமத்தை இலேசாகவும், மென்மையாகவும் உணரச் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நுணுக்கங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இவ் வகைகள் அணிபவரின் மனநிலைக்கேற்ப 2 style cuts களில் கிடைக்கிறது. இறுக்கமான கால்சட்டைகள், பாவாடைகள் மற்றும் டிரஸ்ஸ்களுடன் அணிவது மிகவும் சிறந்தது. 

'இந்த புதிய தெரிவுகளின் சௌகரியம் மற்றும் எடையின்மைக்கு LYCRA© XTRA FINE பருத்தி வகையே காரணம். இத் தெரிவுகள் நடமாடுவதற்கான முழுச் சுதந்திரத்தையும், இலங்கையின் வெப்ப காலநிலைக்கு பொருத்தமாக கனகச்சிதமாகவும் அமைந்துள்ளது' என டிரையம்ப் இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் செயற்பாட்டு தலைவர் அமல் பெர்னாண்டோ தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X