2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அமானா வங்கியின் காலிக் கிளை இடமாற்றம்

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 02 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

2006ம் ஆண்டிலிருந்து வரலாற்ற சிறப்புமிக்க காலி நகரில் தனது சேவையை வழங்கி வந்த அமானா வங்கி அண்மையில் அதன் காலிக் கிளையை மிகவும் சௌகரியமான, இல. 24, பழைய மாத்தறை வீதி, காலி என்ற முகவரிக்கு இடமாற்றியது. இந்நிகழ்வில் காலி மேயர் கௌரவ திரு. மெத்சிரி டி. சில்வா, அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. முஹம்மத் அஸ்மீர், வங்கியின் பணிப்பாளர் திரு. ஜெஸ்ரி மக்டொன் இஸ்மாயில், வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

இந்த வைபவத்தில் உரையாற்றிய வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. அஸ்மீர் அவர்கள் காலியின் மரபுரிமை மற்றும் பாரம்பரியங்களை எடுத்துக் காட்டிய அதேவேளை ' காலி நகரம் ஒரு பாரிய அபிவிருத்தி மையப் பகுதி எனவும், இந்த சிறப்புமிக்க இடத்தில் எமது தடத்தை பலப்படுத்துவதையிட்டும்,  மக்களுக்கு சினேகபூர்வமான வங்கி முறையைக் கொண்டு இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதையிட்டும் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம் எனக்கூறினார். மேலும் எமது புதிய கிளையின் ஊடாக எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த மற்றும் சௌகரியமான சேவையை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம். காலிக் கிளையானது வியாபாரம் சார்ந்த வாடிக்கையாளர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய ஒரு சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி நிலையத்தையும் உருவாக்கியுள்ளது.' என்று கூறினார். 

அத்தோடு தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட காலி நகர மேயர் கௌரவ திரு. மெத்சிரி டி சில்வா அவர்கள் 'உள்ளூர் வியாபாரிகள் மற்றும் தனிநபர்களுக்கு ஆதரவளிப்பதில் அமானா வங்கி வழங்கி வரும் பங்களிப்பை நான் பாராட்டுகின்றேன். அவர்களின் பிரத்தியேக வங்கி முறையானது நிலையான பொருளாதார வளர்ச்சியை சாத்தியப்படுத்துவதற்கு பொருத்தமாக இருக்கும் என நான் நம்புவதோடு. அவர்களின் இந்த புதிய இடத்திலிருந்து வாடிக்கையாளர்களின் நலனுக்காக அளப்பெரும் சேவையை அவர்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.' எனக் குறிப்பிட்டார். 

இந்நிகழ்வை நினைவுகூறும் வகையில், காலி குருந்தகந்த, லபுதுவ பல்வகை உயிரின கல்வி மற்றும் ஆராய்ச்சி சங்கத்துடன் சேர்ந்து ஒரு மரநடுகை நடவடிக்கையையும் அமானா வங்கி மேற்கொண்டது. அமானா வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர்கள், ஊழியர்கள், பல்வகை உயிரின கல்வி மற்றும் ஆராய்ச்சி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

வட்டிசாராத இஸ்லாமிய வங்கி முறையுடன் முற்றிலும் இணங்கி செயற்படுவதற்காக இலங்கையில் முதன் முதல் உத்தரவுபெற்ற வர்த்தக வங்கியாகவும், கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் திரிசவி சபையில் பட்டியலிடப்பட்ட வங்கியாகவும் அமானா வங்கி திகழ்கின்றது. அண்மையில் வருடாந்த சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி மாநாட்டுக்கு இணைவாக குலோபல் பைனான்ஸ் சஞ்சிகையினால் அமெரிக்காவின் வொஷிங்டனில் நடத்தப்பட்ட 2014ஆம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த வங்கிகளை தெரிவு செய்யும் 18ஆவது விருது விழாவில் உலகின் மிகச் சிறந்த முன்னேறி வரும் இஸ்லாமிய வங்கியாகவும் அமானா வங்கி அங்கீகாரம் பெற்றது. தனது மூலோபாய பங்காளிகளான மலேஷியா பேர்ஹாட் இஸ்லாமிய வங்கி, சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, பங்களாதேஷின் ஏ.பீ. வங்கி ஆகியவற்றின் மூலம் ஊக்குவிக்கப்பட்டுள்ள அமானா வங்கி இலங்கையின் வங்கித் துறைக்குள் ஒரு புதிய பாதையை உருவாக்கி வருவதோடு, நாடு பூராகவும் வளர்ந்து வரும் ஒரு பிரத்தியேக வங்கி முறைக்கான சந்தை வாய்ப்பில் தமது மூலதனத்தை மையப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X