Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 பெப்ரவரி 11 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனசக்தி காப்புறுதி நிறுவனமானது, அண்மையில் ஏசியன் பசுபிக் ஹோட்டல், சிங்கப்பூரில் இடம்பெற்ற 5ஆவது CMO ஆசிய விருதுகள் வழங்கும் நிகழ்வில் மீண்டுமொரு தடவை மூன்று பிராந்திய விருதுகளை தனதாக்கிக் கொண்டுள்ளது. சர்வதேச வர்த்தகநாம காங்கிரஸ் மூலம் ஏற்பாடு செய்யப்படும் வர்த்தகநாம செயற்திறனுக்கான உலகளாவிய விருதுகள் நிகழ்வானது உலகின் மிகச்சிறந்த வர்த்தகநாமத்தை கொண்ட நிறுவனங்களின் சாதனைகளை பாராட்டும் ஒரேயொரு மிகப்பெரிய விழாவாக கருதப்படுகிறது.
இதுவரை நிறுவனம் வென்றெடுத்த விருதுகளுள், நீண்டகாலமாக மூலோபாய வர்த்தக குறியீட்டை (Strategic brand building) கட்டியெழுப்பியமைக்காக பெற்றுக்கொண்ட உலகளாவிய வர்த்தகநாம பேண்தகைமை விருது மிக கௌரவத்துக்குரிய விருதாக கருதப்படுகிறது. CMO கவுன்சிலானது பல தொழிற்துறைகளை சேர்ந்த கூட்டாண்மை சந்தைப்படுத்தல் தலைவர்கள் மற்றும் வர்த்தகநாம இறுதி தீர்மானம் எடுப்பவர்கள் மத்தியில் தலைமைத்துவத்தை கொண்டாடுவதுடன், உயர்மட்ட அறிவு பரிமாற்றல் ஆகியவற்றை ஊக்குவித்து வருகின்றது.
இவ் விருதினை நாம் பங்களாதேஷ் BRAC வங்கி போன்ற நட்சத்திர நிறுவனங்களுடன் இணைந்து வென்றமை மிகவும் பெருமைக்குரிய விடயமாகும். BRAC வங்கி, உலகின் பாரிய அபிவிருத்தி மீது கவனம் செலுத்தும் அமைப்பாகும். எனவே அவர்களுக்கு இணையாக எம்மை எண்ணி இவ்விருதினை வழங்கியமை மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்' என விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் செஹாரா டி சில்வா தெரிவித்தார்.
ஜனசக்தி நிறுவனமானது வங்கியியல், நிதிச் சேவைகள் மற்றும் காப்புறுதி பிரிவுகளில் மேலும் இரு விருதுகளை வென்றெடுத்தது. 5ஆவது CMO விருதுகள் விழாவில் நாம் முதற்தடவையாக கொமர்ஷல் கிரெடிட் உடன் இணைந்து வென்றதுடன், இந்த பிரிவில் விருதினை வென்றெடுத்த இலங்கையின் ஒரேயொரு காப்புறுதி நிறுவனமாக ஜனசக்தி திகழ்கிறது. உலகளாவிய வர்த்தகநாம செயற்திறனுக்கான விருதினை வங்கியியல் காப்புறுதி மற்றும் நிதித்துறை பிரிவுகளில் விருதுகளை பெற்றதுடன், HNB, Emirates> The life insurance corp of India மற்றும் BKAS லிமிடெட் போன்றன இப் பிரிவுகளில் விருதுகளை வென்ற ஏனைய நிறுவனங்களாகும்.
தத்தமது வர்த்தகநாம சிறப்பை கட்டியெழுப்புதல் மற்றும் நிலைப்படுத்தல், மூலோபாய சந்தை நிலைப்பாடு, வாடிக்கையாளர் கேள்விகளுக்கமைய பெறுமதி சேர்ப்பு, விளம்பர செயற்பாடுகளில் புதுமையான மூலோபாயங்கள், CSRஇன் நோக்கம், பேண்தகைமை கொள்கை மற்றும் ஒட்டுமொத்த வர்த்தகநாம செயற்திறன் அடிப்படையில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
தொழிற்துறையில் அறிவை பரிமாறிக்கொள்வது இவ் உலகளாவிய விருதுகள் வழங்கும் நிகழ்வின் பிரதான குறிக்கோளில் ஒன்றாகும். இவ் வருட மாநாட்டின் தொனிப்பொருள் 'நவீன வர்த்தக குறியிடலில் நீடிப்பு மற்றும் பேண்தகைமை' என்பதாகும். இம் மாநாட்டில் பல தலைவர்கள் உரையாற்றியதுடன், 'எதிர்கால வேலைத்தளம்' எனும் தலைப்பில் ஒமின்கொம் மீடியா குரூப் இன் பிரதம நிறைவேற்று அதிகாரி Andreas Vogiatzakis இன் சொற்பொழிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
'நாம் சமூகத்திற்கு நன்மையளிக்கும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், இளம் மெய்வல்லுநர் போட்டி, கிரிக்கெட், றகர் மற்றும் ஸ்குவாஷ் போன்ற போட்டிகளுக்கு அனுசரணையையும் வழங்கியுள்ளோம்' என வர்த்தநாம செயலாக்க முகாமையாளர் கெலும் வீரசிங்க தெரிவித்தார்.
'நாள்பட்ட சிறுநீரக நோய்களுக்காக இலவச சிறுநீரக பரிசோதனை, பெருமூளை வாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி சேகரிக்கும் திட்டங்கள், வடக்கு மற்றும் தெற்கு சிறுவர்களுக்கிடையே உறவுப்பாலத்தை ஏற்படுத்தும் இசை திட்டங்கள், பெண்களை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் மன்றங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் திட்டங்கள், முயற்சியாண்மைகளுக்கு அனுசரணை வழங்கி SME துறையை மேம்படுத்தல்;, அண்மைக்காலமாக சுற்றுச்சூழலின் பாதுகாப்பு கருதி நீர் பாதுகாப்புக்காக அதிகப்படியான நேரம் மற்றும் ஆற்றலை செலவிட்டு வருகின்றோம்' என மேலும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் லங்கா-ஜலனி நீர் பங்காண்மை உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட மாஓய நீர் திட்டத்தின் மூலம் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அனுகூலங்களை பெற்றுள்ளனர்.
ஜனசக்தி நிறுவனத்தின் பாடசாலை விழிப்புணர்வு திட்டங்கள், ஆற்றுநீர் வடிகாலமைப்பு திட்டங்கள், மழைநீர் சேகரிப்பு மற்றும் ஏனைய திட்டங்கள் சமூக ஈடுபாட்டினை உறுதி செய்வதுடன், பேண்தகைமையில் தாக்கம் செலுத்தும் தேசிய திட்டங்களின் கூட்டாண்மை தொண்டுகளை விளக்குவதாகவும் அமைந்துள்ளது.
வர்த்தககுறியை மூலோபாய மட்டத்தில் பேணுவதற்குரிய முறைமையை ஜனசக்தி கொண்டுள்ளதுடன், நீல்சன் போன்ற புகழ்பெற்ற சந்தை ஆய்வு நிறுவனத்தினால் தமது வர்த்தகநாம பெறுமதியை கண்காணித்து வருகின்றது. மேலும் நிறுவனமானது நிர்வாக செயல்திறன் பரிசீலணைகளில் பயன்படுத்தப்படும் வாடிக்கையாளர் திருப்திக்கான செயல்திறன் குறியீடுகளை கொண்டுள்ளது.
வாடிக்கையாளர் உறவு முகாமைத்துவ திணைக்களத்தின் மூலம் ஆண்டிற்கு இரு தடவைகள் கண்காணிப்பும், முகாமைத்துவ குழுக்களின் கலந்துரையாடல்கள் மூலம் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு சிறந்த வாடிக்கையாளர் திருப்திக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
'இவை அனைத்தும் மதிப்பு சேர்த்தல் பற்றியதாகும். தொடர்ந்து மனித மூலதனத்திற்கு பெறுமதி சேர்க்க எம்மால் முடிந்துள்ளது. இந்த துறையில் செயற்திறனை வெளிப்படுத்த நாம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் இத் துறையில் மாற்றத்தை உருவாக்குவதில் அளப்பரிய பங்களிப்பை வகிக்கிறது' என செஹாரா டி சில்வா தெரிவித்தார்.
6 hours ago
9 hours ago
20 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
20 Sep 2025