2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இன்டஸ்ரியல் அஸ்பால்ட்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில் யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 20 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று தசாப்த கால யுத்தம் நிறைவடைந்த தற்போதைய சூழலில் பல்வேறு தொழிற்துறைகளுக்கும் வர்த்தகத்திற்குமான பரவலான வாய்ப்புக்களையும் வசதிகளையும் யாழ் குடாநாடு வழங்கியுள்ளது. பல்வேறு வர்த்தக துறையினருக்கும் துரிதமாக வளர்ச்சி கண்டிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ள வட பகுதியில், பல்வேறு புதிய வர்த்தக துறையினருக்கும் காலடி எடுத்து வைத்திட சிறந்ததோர் இடமாக யாழ் குடாநாடு கருதப்படுகின்றது. வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் யாழ் குடாநாட்டில் இடம்பெறும் யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் 2015 ஆம் ஆண்டில் ஆறாவது ஆண்டாகவும் இன்டஸ்ரியல் அஸ்பால்ட்ஸ் (சிலோன்) பிஎல்சி நிறுவனம் அனுசரணை வழங்குவதில் பெருமையடைகின்றது. 

ஜனவரி மாதம் 23, 24 மற்றும் 25 ஆகிய மூன்று நாட்களும் யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இடம்பெற்ற இந்த மூன்று நாள் கண்காட்சியில் பல்வேறு தொழிற்துறையினருக்கு தம் வர்த்தக பொருட்களை காட்சிப்படுத்த வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த வகையில் விவசாயம், நுகர்வுப் பொருட்கள், கட்டுமானம், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், நிதி சேவைகள், ஆடை, உபசரிப்பு சேவைகள், வாகன பொறியியல் மற்றும் சுற்றுலா உட்பட பல்வேறு தொழிற்துறையினரால் இக்கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது. 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இன்டஸ்ரியல் அஸ்பால்ட்ஸ் (சிலோன்) பிஎல்சி (Industrial Asphalts (Ceylon) Plc), நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் / தலைமை நிறைவேற்று அதிகாரி G.ரமணன், 'நாட்டில் இடம்பெறும் மிக முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக கண்காட்சிக்கு எமது ஆதரவை தொடர்ச்சியாக  வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்'. 

மேலும் அவர் தெரிவிக்கையில், 'எமது உற்பத்தி மற்றும் வர்த்தக நாமங்களை யாழ் குடாநாட்டில் பலப்படுத்தி எமது வர்த்தக ரீதியிலான  உறவை மேலும் வலுப்படுத்த எண்ணியுள்ளதோடு, இந்நடவடிக்கைகள் இலங்கை பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய தாக்கத்தை வகிக்கும் என்பதில் ஐயமில்லை' எனவும் கூறியுள்ளார்.    

சமீபத்தில், இன்டஸ்ரியல் அஸ்பால்ட்ஸ் (சிலோன்) பிஎல்சி (Industrial Asphalts (Ceylon) Plc), நிறுவனமானது இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரிப்படையாத நிறப் பூச்சுக்களின் முழுமையான தெரிவுகளை அறிமுகம் செய்த பெருமையை தன்வசமாக்கியுள்ளது. பாதுகாப்புத் திறன் மிக்க நிறப் பூச்சு வகைகளை Britex® எனும் நாமத்தில் தயாரித்துவரும் இன்டஸ்ரியல் அஸ்பால்ட்ஸ் (சிலோன்) பிஎல்சி நிறுவனத்தின் பாதுகாப்புத் திறன்மிக்க அரிப்படையாத நிறப் பூச்சு வகைகளை வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் சந்தைப்படுத்தி வருகின்றது. 

இன்டஸ்ரியல் அஸ்பால்ட்ஸ் நிறுவனம் தற்போது தன் வாடிக்கையாளர்களுக்கு 1000க்கும் மேற்பட்ட வர்ணத் தெரிவுகளை தனது பிரதான விநியோகஸ்தர்களின் மூலமாக தெரிவு செய்துகொள்ளக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 50 வருடங்களுக்கு மேலாக நீண்ட கால பாவனையைத் தரும் பாதுகாப்பான நிறப் பூச்சு வகைகளை சந்தையில் விநியோகிக்கும் Britex® நிறுவனம் சர்வதேச தரத்தில் நியாயமான விலையில் கிடைக்கக்கூடிய தன் தயாரிப்புக்களை சந்தைப்படுத்தி வருகின்றமை வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறுவதற்கான முக்கிய காரணியாகும். 

இலங்கையில் தார் (Bitumen) அடிப்படையிலான உற்பத்திகளின் முன்னோடியாக திகழ்ந்த இன்டஸ்ரியல் அஸ்பால்ட்ஸ் சிலோன் பிஎல்சி நிறுவனம், பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோக உரிமையின் ஓர் அங்கமாக இருந்த இத்துறையை உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் நிலையை உருவாக்க வேண்டும் என்ற கனவைக் கொண்டிருந்த துணிச்சல் மிக்க இலங்கையர்களினால் 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இன்டஸ்ரியல் அஸ்பால்ட்ஸ் நிறுவனம்  தரமான தார் வகைகளை 80/100, 60/70 மற்றும் ஒக்சியேற்றம் செய்யப்பட்ட தார் (Oxidized Bitumen) 85/25 ஆகியவற்றை விநியோகம் செய்தது. மேலும், ரோட் இமல்ஷன் மற்றும் கட்பெக்ஸ் ஆகியவற்றையும் Sealkote® எனும் வர்த்தக நாமத்தில் வழங்கி வருகிறது. அத்துடன் இன்டஸ்ரியல் அஸ்பால்ட்ஸ் சிலோன் பிஎல்சி நிறுவனம் நீர் மற்றும் காலநிலை  போன்றவற்றிற்கு (Water Proof, Weather Proof) ஈடுகொடுக்கக்கூடிய தயாரிப்புகளின் உரிமையாண்மையினை கொண்டுள்ளதுடன் NOLEAK® எனும் வர்த்தக நாமத்தின் ஊடாக இவற்றை சந்தைப்படுத்தி வருகின்றது. 

இன்டஸ்ரியல் அஸ்பால்ட்ஸ் (சிலோன்) பிஎல்சி, கொழும்பு பங்குச் சந்தையில் (குறியீடு: ASPH) பிரதான அங்கம் வகிக்கும் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். உள்நாட்டில் தார் தயாரிப்புகளை சுயாதீனமாக உற்பத்தி செய்யக்கூடிய 100 சத வீதம் உரிமையாண்மையை கொண்ட முதலாவது நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

இன்டஸ்ரியல் அஸ்பால்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு தெரிவுகளில் வீட்டுப்பாவனை தொடக்கம் தொழிற்துறைகளுக்கான தயாரிப்புகள் வரையான பரவலான தயாரிப்புகள் உள்ளடங்கியுள்ளன. இவற்றில் Sealkote®, Britex®,NOLEAK®, Exchemie®, Autosyl®, Bitkote®, Felt Fix®, Barkseal® போன்றவை அடங்கும். இந்த பதிவு செய்யப்பட்ட வர்த்தக நாம தயாரிப்புகளுக்கு நுகர்வேர் மத்தியில் அதிகளவு கேள்வி காணப்படுகின்றது. இதற்கு இந்த தயாரிப்புகளின் உயர் தரம் பிரதான காரணியாகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X