2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

Habitat நிறுவனத்துடன் கைகோர்க்கும் லபார்ஜ்

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 20 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் நடவடிக்கை தொடர்பாக Habitat நிறுவனத்துடன் லபார்ஜ் மகாவலி சீமேந்து நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது லபார்ஜ் மகாவலி சீமேந்து நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அநுராக் காக் மற்றும் Habitat நிறுவனத்தின் பிரதித் தலைவர் அமிலா டி மெல் ஆகியோருக்கு இடையில் செய்துகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக Habitat நிறுவனம் இலங்கையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக வீடுகளை அமைத்துக் கொடுக்க எதிர்பார்ப்பதோடு இதன் முதற்கட்டமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கான தொழில்நுட்ப உதவிகளை லபார்ஜ் மகாவலி சீமேந்து நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளவுள்ளது.

'சிறந்த நகரங்களை உருவாக்குதல்' என்ற தொனிப்பொருளின் கீழ் நாட்டிலுள்ள குறைந்த வருமானம் பெறுவோருக்கு சிறந்த வீடுகளை அமைத்துக் கொடுக்கும் செயற்திட்டம் லபார்ஜ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறைந்த விலையில் வீடுகளை அமைக்கும் சவால் நிறைந்த செயற்திட்டத்தை லபார்ஜ் நிறுவனம் 2013ஆம் ஆண்டில் ஆரம்பித்தது. அந்த வேலைத் திட்டத்தின் பெயர் 'சவி பியச' ஆகும். இந்த திட்டத்தின் கீழ் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் மற்றும் கட்டடக்கலைஞர்களது ஆதரவுடன் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடுகளை அமைத்துக்கொள்வதற்கு வழி அமைந்துக் கொடுக்கும் திட்டமாகும்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த Habitat Sri Lanka for Humanity நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் கலாநிதி டினேஷ் கனகரத்னம், தற்போது எமது செயற்பாடுகளை உலகளாவிய ரீதியில் 70க்கும் அதிகமான நாடுகளில் விஸ்தரித்துள்ளதோடு 35 ஆண்டுகளாக எமது சிறந்த சேவையை மேற்கொண்டு வருகின்றோம். இலங்கையில், 1995ஆம் ஆண்டு Habitat நிறுவனத்தை ஆரம்பித்தோம். கடந்த 20 வருடங்களாக 20,000 குடும்பங்களை பாதுகாத்துள்ளோம். இந்திய அரசின் நிதி அனுசரணையுடன் வடக்கு கிழக்கு பகுதிகளில் சுமார் 4000 வீடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம். Habitat தமது வீட்டுத் திட்டத்தை களுத்துறை மட்டுமன்றி முத்துராஜவெல ஆகிய பகுதிகளிலும் லபார்ஜ் நிறுவனத்துடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஊடாக சிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியுமென நான் நம்புகின்றேன்' எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த லபார்ஜ் மகாவலி சீமேந்து நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அநுராக் காக், 'இன்று நாம் உலகின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டு வரும் நிலையான வீடமைப்புத் திட்டத்தை கவனித்துப் பார்த்தால், அதனூடாக வீடொன்றை வாங்க முடியாத மக்களுக்கு மலிவான விலையில் வீடுகளை வாங்குவதற்கு தீர்வுகளை அளிப்பதன் ஊடாக சிறந்ததொரு பொறுப்பை மேற்கொள்ள முன்னெடுத்துள்ளதோடு இலங்கையில் மேலும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு உத்தேசித்துள்ளோம்' எனத் தெரிவித்தார்.

லபார்ஜ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சவி பியச நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் குறைந்த செலவில் அர்த்தமுள்ள தீர்வுகளை வழங்கக்கூடிய வழிமுறைகள் அடையாளம் காணப்பட்டன. அதனால் வீடொன்றை வாங்க விரும்புவோருக்கு நாம் வணிக வங்கிகளுடனும் இணைந்து தொழில்நுட்ப உதவிகளை வழங்கினோம்.' இந்த செயற்திட்டத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும் வெற்றிகரமாக மேற்கொண்டனர். இதற்கு காரணம் அதனை அட்டவணைப்படுத்தி திறம்பட்ட விதத்தில் மேற்கொள்ளவேண்டிய தேவை அவர்களுக்கு இருந்ததால்தான் இது வெற்றியளித்தது. எமது மற்றுமொரு சிறந்ததொரு முன்னெடுப்பாக குறைந்த செலவிலவில் சிறந்த வீடுகளை அமைக்கும் திட்டத்தை மேற்கொள்ள Habitat உடன் கைகோர்த்தோம். இவ்வாறு இரு நிறுவனங்கள் கைகோர்த்ததன் ஊடாக எவ்வித சந்தேகமும் இல்லாமல் சிறந்ததொரு சேவையை வழங்க முடியும் என லபார்ஜ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அநுராக் காக் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X